2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கப்பலிலிருந்து புகையிரதம் வாயிலாக கிளிங்கர் போக்குவரத்து அறிமுகம்

Gavitha   / 2016 மே 31 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீமெந்து துறை என்பது தேசத்தின் கட்டுமான துறையில் வானுயர்ந்த கட்டடங்களின் நிர்மாணத்துக்கு இன்றியமையாததாக காணப்படுகிறது. உள்நாட்டு சீமெந்து துறையில் புரட்சிகரமிக்க நிலையான போக்குவரத்து தீர்வுகள் வழங்குநரான LafargeHolcim குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமான ஹொல்சிம் லங்கா நிறுவனம் அதன் பிரதான மூலப்பொருட்களின் போக்குவரத்துக்காக 'கப்பலிலிருந்து புகையிரதம் வாயிலான ஹைபிரிட் முறைமை' ஐ அண்மையில் அங்குரார்ப்பணம் செய்திருந்தது. திருகோணமலை சைனா பே ரயில் நிலையத்தில் இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ.நிமல் சிறிபால டி சில்வாவினால் புதிய போக்குவரத்து இணைப்பு திறந்து வைக்கப்பட்டது. மேலும் ஹொல்சிம் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமையாளர்களும் போக்குரத்து அமைச்சின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் இந்நிகழ்வில் ஹொல்சிம் லங்கா நிறுவனத்துக்கும் இலங்கை அரசிற்குமிடையே பொது-தனியார் கைகோர்ப்பு ஒன்றும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரச ரயில் சேவை மூலமாக ஹொல்சிம் சீமெந்து உற்பத்திக்கான பிரதான மூலப்பொருட்கள் திருகோணமலை கிழக்கு துறைமுகத்திலிருந்து மஹவ புகையிரத நிலையத்துக்கு ரயில் வாயிலாக கொண்டு செல்லப்படுவதுடன், அங்கிருந்து நிறுவனத்துக்கு சொந்தமான டிரக்குகளுடாக புத்தளத்திலுள்ள சீமெந்து தொழிற்சாலைக்கு மூலப்பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

கிளிங்கர் இறக்குமதிக்கான கேள்வி அதிகரித்துள்ளதன் காரணமாக உயர் தரமான சீமெந்தினை தொடர்ச்சியாக விநியோகிப்பதை உறுதிப்படுத்;தும் வகையில், மிகப்பெரிய மொத்த சரக்குகள் மற்றும் சிறிய கப்பல்கள் கொண்ட ஹொல்சிம் நிறுவனத்தின் செயற்திறன் மிக்க கப்பலிலிருந்து-கப்பலுக்கு வாயிலான செயல்பாடுகளின் தொடர்ச்சியாக இந்த புகையிரதம்-வீதி வாயிலான ஹெபிரிட் மாதிரி அமைந்துள்ளது.

மாற்றீடாகவுள்ள கப்பலிலிருந்து-வீதி வாயிலான சரக்கியல் தீர்வின் ஒட்டுமொத்த அனுகூலங்களும் ஹொல்சிம்மின் சூழல் மீதான அக்கறை மற்றும் மதிப்பை தெளிவுபடுத்துவதாக அமைந்துள்ளது.

'நாடு முழுவதும் எமது மூலப்பொருட்கள் மற்றும் சரக்குகளின்; சூழல் சார்ந்த நிலையான இயக்கத்தின் விநியோகத்தை மேலும் செயற்றிறன்மிக்கதாக மாற்றும் திட்டங்கள் மீது முதலீடு செய்து வருகிறோம். போக்குவரத்து அமைச்சின் ஆதரவின்றி இந்த அங்குராப்பணம் நிச்சயமமாக சாத்தியமில்லை' என ஹொல்சிம் லங்கா நிறுவனத்தின் கொள்முதல் மற்றும் சரக்கியல் பிரிவின் பணிப்பாளர் சரித் விஜேந்திர தெரிவித்தார்.

சிறிய சரக்கு கப்பல்களுக்கு பதிலாக supramax சரக்கு கப்பல்களை பயன்படுத்துவதன் ஊடாக கரியமில வெளியேற்றம் 10%க்கும் மேலாக குறைக்கப்படுகிறது. திறந்த டிரக்குக்களிலிருந்து கொள்கலன்களுக்கு விநியோகம் மாற்றமடைந்ததன் மூலமாக சிதைவுகள் 'பூஜ்ஜியம்' ஆக குறைவடைந்துள்ளது. புகையிரதம் வாயிலான போக்குவரத்து ஊடாக 3 மில்லியன் கிலோ மீற்றர் தூரத்திலிருந்து 0.8 மில்லியன் கிலோ மீற்றராக குறைவடைந்து, 27% வீத வளர்ச்சியை எட்டியுள்ளது. தரை வழி போக்குவரத்தின் பாரிய குறைப்பு ஊடாக கரியமில தடம் 17% ஆல் குறைவடைந்துள்ளது. மேலும் இந்த நிறுவனம் போக்குவரத்து நெரிசலையும், பாதுகாப்பு சார்ந்த இடர்பாடுகளையும் பாரியளவில் குறைத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .