2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக சிங்கர் தெரிவு

Gavitha   / 2016 டிசெம்பர் 20 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலுள்ள 10 தலைசிறந்த நிறுவனப் பிரஜைகளில் ஒன்றாக சிங்கர் ஸ்ரீ லங்காவை இலங்கை வர்த்தக சம்மேளனம் (CCC) மீண்டும் தெரிவு செய்துள்ளது. அண்மையில் நடைபெற்ற மிகச் சிறந்த நிறுவனப் பிரஜைகளுக்கு விருது வழங்கும் நிகழ்வில் மிகச் சிறந்த செயற்பாட்டுக்கான துறைசார் விருது (வேறு), “சமையற்கலை போதனை” திட்டத்துக்காக மிகச் சிறந்த நிலைபெறுதகு வேலைத்திட்டத்துக்குரிய திறமைச் சான்றிதழ் என்பனவும் சிங்கருக்கு வழங்கப்பட்டன.  

இலங்கையில் நிறுவன ரிதியான நிலைபெறு தன்மையின் முக்கியத்துவத்தை அங்கிகரிப்பதும் மக்கள், புவி மற்றும் இலாபத்தை மையமாகக் கொண்ட வியாபாரக் கொள்கையை ஊக்குவிப்பதுமே மிகச் சிறந்த நிறுவனப் பிரஜை நிலைபெறுதகு விருதுகள் வழங்கப்படுவதன் குறிக்கோளாகும். அதாவது, கிடைக்கக்கூடிய வளங்களை மதிநுட்பமாகப் பயன்படுத்துதல், மாசடைதலை இயன்றபட்சம் குறைத்தல், தொழிலாளர்கள் மற்றும் பாவனையாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்துதல், பொதுவாகச் சகல மக்களினதும் நலன்களைப் பேணுதல் ஆகிய கொள்கைகளின் அடிப்படையிலான செயன்முறைகளையும் அமைப்புக்களையும் பயன்படுத்திப் பண்டங்களையும் சேவைகளையும் உருவாக்கும் சிறந்த நடைமுறைகளையே இது குறிக்கிறது. 

சிங்கர் ஸ்ரீலங்கா தனது சகல வியாபார நடவடிக்கைகளிலும் அத்தகைய நிலைபெறு தன்மையைப் பூரணமாக ஒருங்கிணைக்கப்பட வேண்டுமென நம்புகிறது. ஆகவே, சிங்கர் குழுமத்தின் சகல நிறுவனங்களும் அவற்றின் நிறுவன சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டங்களை அதற்கேற்றவாறு நெறிப்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன. அது மாத்திரமன்றி, புதிய  CSR முன்முயற்சிகளை் பிரேரிப்பதற்கு சகல ஊழியர்களும் சிங்கர் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியினால் ஊக்குவிக்கப்படுகிறார்கள். அவர்கள் சமர்ப்பிக்கும் திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட்டு, பயனுள்ள மற்றும் சாத்தியமான திட்டங்கள் அமுல் செய்யப்படுகின்றன.சிங்கரின் விற்பனை மற்றும் வர்த்தகப் பணிப்பாளர் மகேஷ் விஜேரத்ன கருத்து தெரிவிக்கையில், “2016ஆம் ஆண்டிலும் மிகச் சிறந்த நிறுவனப் பிரஜைகளில் ஒன்று என்னும் விருது இலங்கை வர்த்தகச் சம்மேளனத்தினால் சிங்கருக்கு வழங்கப்பட்டிருப்பது குறித்து நாம் பெருமையடைகிறோம்.

எமது முன்முயற்சிகளின் தரச்சிறப்பை உள்ளக ரிதியாக மீளாய்வு செய்வதுடன் அமைந்துவிடாது, புகழ்பெற்ற நடுவர்களின் மதிப்பீட்டுக்கு சமர்ப்பிக்கும் வாய்ப்பு இதன் மூலம் கிடைத்துள்ளது. இது எமது தொடர்ச்சியான முன்னேற்றத்துக்கு உதவும். எமது வெற்றிக்கு ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் பங்களிப்புச் செய்த சகல சிங்கர் ஊழியர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனறார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .