2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஓராக்கிளின் புதிய தீர்வுகள் அறிமுகம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 15 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஒராக்கிள் நிறுவனத்தின் புதிய தீர்வுகளான Oracle Exalogic Elastic Cloud T3-1B மற்றும் SPARC Supercluster போன்றவற்றை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த Oracle Exalogic Elastic Cloud T3-1B தீர்வு திட்டமானது ஆயிரத்துக்கும் அதிகமான சன் ஜாவா தொழில்நுட்பத்தில் செயற்படக்கூடிய திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்வையின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் தொடர்பான பிரச்சனைகளை அவை ஏற்படுவதற்கு முன்னராகவே இலகுவாக இனங்கண்டுகொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த Oracle Exalogic Elastic Cloud T3-1B தீர்வு திட்டம் குறித்து ஒராக்கிள் ஃபியுசன் மிட்டில்வெயாரின் சிரேஷ்ட பிரதி தலைவர் ஹசன் றிஸ்வி கருத்து வெளியிடுகையில், 'ஜாவா தொழில்நுட்பத்தில் மென்பொருள் மற்றும் வன்பொருள் தீர்வுகளை வழங்குவதில் ஒராக்கிள் முன்னணியில் திகழ்கிறது. இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் பெருமளவு நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும்' என்றார்.  

இந்த SPARC Supercluster தீர்வானது ஒராக்கிள் டேடாபேஸ்RAC  பதிப்பில் செயற்படக்கூடிய முற்று முழுதான தீர்வாகும். இந்த SPARC Supercluster இல் SPARC T3 or M5000 servers, Sun ZFS Storage 7420 servers மற்றும் Sun Network ZFS InfiniBand Gateway Switches  போன்றன உள்ளடங்கியுள்ளன.

SPARC Supercluster  தீர்வு குறித்து ஒராக்கிளின் பிரதம நிறைவேற்று அதிகாரி லாரி எலிசன் கருத்து தெரிவிக்கையில், 'வன்பொருள், சேர்வர், வலையமைப்பு மற்றும் தர சேமிப்பு குடும்பத்தின் புதிய அங்கமாக இந்த தீர்வு உள்ளடக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் வர்த்தக நடவடிக்கைகளை மேலும் இலகுபடுத்தும் நோக்கிலேயே இந்த தீர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது' என கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .