2024 மே 14, செவ்வாய்க்கிழமை

மெட்ரோபொலிட்டன் கம்பியூட்டர்ஸ் நிறுவனத்திடமிருந்து தொடுகைத்திரை கணினிகள்

A.P.Mathan   / 2012 நவம்பர் 13 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிதாக அறிமுகமான 'விண்டோஸ் 8' மென்பொருளுடனான பரந்துபட்ட வகைகளிலான புதிய Acer தொடுகைத்திரை கணினிகளை அறிமுகப்படுத்துவது தொடர்பில் மெட்ரோபொலிட்டன் கம்பியூட்டர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்மூலம், மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் இந்த மென்பொருள் அண்மையில் அறிமுகப்படுத்தப்படும் நிலையில், அதனோடிணைந்தாற்போல் ஒரேசமயத்தில் இலங்கையில் விண்டோஸ் மென்பொருளை அறிமுகப்படுத்தும் முதலாவது நிறுவனமாக மெட்ரோபொலிட்டன் கம்பியூட்டர்ஸ் திகழ்கின்றது.

மெல்லிய மற்றும் பாரம் குறைந்த உபகரணங்களுக்காக உலகளவில் ஏற்பட்டுள்ள கேள்வியை நிவர்த்திசெய்யும் வகையிலமைந்த புதிய தொடரிலான Acer பல்தொடுகை ஆற்றலுள்ள கணினிகள், ஒருவரது அனுபவத்தை அடுத்தமட்டத்திற்கு கொண்டு செல்கின்றன. ஹைபிரைட் நோட்புக் தனிநபர் கணினிகள் மற்றும் அனைத்து வசதிகளையும் ஒருங்கேகொண்ட (All-in-One) தனிநபர் கணினிகள் போன்ற பெரிய காட்சிமுக (Display) உற்பத்திகள் பிரிவின் தொடுகைதிரைகள் விடயத்தில் அடுத்துவரும் சில வருடங்களில் உறுதிமிக்கதான வளர்ச்சியொன்று ஏற்படுவதற்கு இது உந்துசக்தியாக அமைகின்றது.

இடத்துக்கிடம் எடுத்துச்செல்லும் ஆற்றலை மீள்-வரையறை செய்யும் வகையில் Aspire S7 எனும் உலகில் மிக மெல்லிய தொடுகைத்திறனுள்ள அல்ட்ராபுக்கை Acer அறிமுகம் செய்கின்றது. மென்பளபளப்பான அலுமீனியம் மேல்மூடியை கொண்டுள்ள Aspire S7 ஆனது மிகமிக தடிப்பு குறைந்ததாகவும், அதீத உறுதிகொண்டதாகவும் அதேநேரம் வீதிகளில் பயணிக்கின்றபோது பயன்படுத்த மிகப் பொருத்தமானதாகவும் காணப்படுகின்றது. இதனது பிரமிக்கச் செய்யும் 11.6'' மற்றும் 13.3'' அளவுகளிலான உயர் ஒளித்தெளிவுள்ள காட்சிமுக தொடுதிரையானது, சமூகத் தொடர்புடனும் காரியம் சாதிப்பவராகவும் களிப்புடனும் இருக்க உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. அத்துடன் இலகு தொடுகையுடன் காட்சிப்படுத்தும் வசதியையும் உங்களுக்காக திறந்துவிடுகின்றது.

குறைந்த ஒளிப் பின்புலத்தைக்கொண்ட சூழ்நிலைகளிலும் சௌகரியமாக பயன்படுத்துவதற்கு பொருத்தமான ஒளியை பெற்றுக்கொள்ளும் வகையில் இதிலுள்ள விசைப்பலகை (கீபோட்) ஆனது தன்னியக்க ஒளிர்திறனை கொண்டமைந்துள்ள அதேவேளையில், Acer இன் இரட்டைவழி காற்று குளிர்மையாக்கல் கட்டமைப்பானது S7 தொடரிலான வடிவமைப்புக்களை கையில் வைத்திருப்பதை மகிழ்ச்சிகரமான அனுபவமாக மாற்றியமைக்கின்றது. இதன் காட்சிமுகப் பகுதியானது 180 பாகையில் திறபடக் கூடியதாக காணப்படுவதால், வேறுபட்ட காட்சிப் புலங்களில் இருந்து பார்வையிடக் கூடிய வசதியை வழங்குகின்றது. Acer Aspire S7 தொடரானது, மூன்றாம் தலைமுறை Intel core i5 மற்றும் i7 புரசஸர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

உயர் ஒளித்திறனையுடைய காட்சிமுக தொடுதிரை, DVD Writer உடனான மிக மெல்லிய வடிவமைப்பு ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ள Aspire M5 கணினியானது நான்கு மடங்கு வேகமாக இணையத்துடன் இணைப்பை ஏற்படுத்தக் கூடியது. அத்துடன் DDR 5 பிரத்தியேக வீடியோ மெமோரியின் துணையுடன் மேம்பட்ட கிராபிக் தொழிற்பாடுகளுக்கும் உத்தரவாதம் அளிக்கின்றது. 6GB RAM உடனான மூன்றாம் தலைமுறை Intel core i5 மற்றும் i7 புரசஸர்களும் கூட செயற்படு வேகத்தை கணிசமானளவுக்கு அதிகரிக்கச் செய்கின்றன.

Acer Iconia Tablet PC தொடரிலான கணினிகள் மற்றுமொரு மிகமிக பாரம் குறைந்த, மெல்லிய வடிவமைப்பைக் கொண்ட இதமான தீர்வாக அமைவதுடன் மேலதிக Ports மற்றும் மாறுபட்ட பயன்பாட்டு வசதிகளையும் வழங்குகின்றது. Acer Iconia W700 Tablet ஆனது, மூன்றாம் தலைமுறை Intel core i5 புரசஸரினால் சக்தியளிக்கப்பட்டுள்ள அதேநேரம், அதிபார வேலையையும் எவ்வித சிரமங்களுமின்றி மேற்கொள்வதற்கு உத்தரவாதம் அளிக்கின்றது. அதுமட்டுமன்றி இக்கணினியானது நான்கு மடங்கு வேகமாக இணையத்துடன் இணைப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதுடன், 1.5 வினாடிகளுக்குள் மீண்டும் இயங்குநிலைக்கு மீளும் (Resume) ஆற்றலையும் தன்னகத்தே கொண்டதாகும்,

Acer Iconia Tablet W510 கணினியானது முன்னேற்றகரமான Intel ATOM Z2670 புரசஸர் மற்றும் 5 விரல்களின் மூலமான 'பல்லிட தொடுகைத் திறனுடன்' உயர் ஒளித்தெளிவை கொண்டுள்ள காட்சிமுக திரை ஆகியவற்றினால் சக்தி அளிக்கப்பட்டுள்ளது. 580 கிராம் என்ற மிகக் குறைந்த நிறையையுடைய இந்தக் கணினி, Keyboard Dock செயற்பாட்டு நிலையில் வைக்கப்பட்டால் 18 மணித்தியாலங்கள் வரையான அதிக நேரம் இயங்கக்கூடிய சிறப்பம்சத்தையும் கொண்டதாகும்.

அனைத்து வசதிகளையும் ஒருங்கேகொண்ட மேசைக் கணினிகள் பாரம்பரியமான உள்ளக வேலை அனுபவத்தை மேம்படுத்துகின்றன. 30 தொடக்கம் 80 வரையான பல்வேறு சாய்கோணங்களில் இருந்தவாறு வேறுபட்ட தொடுகை அனுபவங்களை பெற்று மகிழக்கூடிய வசதி, உயர் ஒளித்தெளிவுள்ள தொடுகைத்திரை அதுமட்டுமன்றி மிக மெல்லிய வடிவமைப்பு போன்றவற்றையும் இது கொண்டுள்ளது.

Acer எனும் உலகத்தில் உள்ள தொடுகைத் திரைக் கணினிகள் அனைத்தையும் இன்னும் ஒரு சில நாட்களில் மெட்ரோபொலிட்டன் கம்பியூட்டர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் ஊடாக கிடைக்கக் கூடியதாக இருக்கும்.

மெட்ரோபொலிட்டன் கம்பியூட்டர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நிரஞ்சன் டி சில்வா கூறுகையில், 'தொழில்நுட்பத்தில் ஏற்படுகின்ற முன்னேற்றங்கள் மற்றும் நுண்ணியக்க உபகரணங்கள் உலகின் இப்பாகத்திற்கு, அதிலும் விஷேடமாக இலங்கைச் சந்தைக்கு வருவதற்கு குறிப்பிடத்தக்க காலம் எடுப்பது வழக்கமாகவுள்ளது' என்றார். அவர் மேலும் கூறுகையில், 'உலகின் நவீன தொழில்நுட்பங்கள் சர்வதேச அளவில் அறிமுகமாகியபின் கூடுமானவரை விரைவாக அவற்றை அனுபவிக்கக் கூடிய வாய்ப்பை இலங்கை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதே எமது கோட்பாடாக இருக்கின்றது. அந்தவகையில். 'விண்டோஸ் 8' மென்பொருள் உட்பொதிக்கப்பட்ட பரந்த வகைகளிலான தொடுகைத் திரை கணினிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் முதலாவது நிறுவனமாக திகழ்வதையிட்டு நாம் பெருமிதம் அடைகின்றோம்' என்று குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .