2024 மே 09, வியாழக்கிழமை

இரு அரச வங்கிகளின் ஏரிஎம் வலையமைப்புகள் ஒன்றிணைப்பு

A.P.Mathan   / 2013 ஜூலை 24 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றின் 900க்கும் அதிகமான ஏரிஎம்கள் ஒரே வலையமைப்பினுள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இவ்விரண்டு வங்கிகளையும் சேர்ந்த வாடிக்கைகயாளர்கள் தமது பண மீளப்பெறுகைகளை இலங்கை வங்கி அல்லது மக்கள் வங்கி ஏரிஎம் இயந்திரங்களின் ஊடாக மேற்கொள்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்த சேவை முதன் முறையான இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் ஆரம்பித்து வைத்திருந்தார். இலங்கை முழுவதும் மொத்தமாக 3000க்கும் அதிகமான ஏரிஎம் இயந்திரங்கள் காணப்படுவதாகவும், இவை அனைத்தையும் ஒரே வலையமைப்பினுள் உள்வாங்கச் செய்வதே தமது இலக்கு எனவும் இவர் குறிப்பிட்டிருந்தார்.
 
இந்த வலையமைப்புக்கான சேவையை லங்காகிளியர் வழங்கியிருந்தது. இந்த முறையிலான பண மீளப்பெறுகைகளின் போது, வாடிக்கையாளர் கணக்குகள் நேரடியாக பற்று வைக்கப்படுவதுடன், முழுமையான கொடுக்கல் வாங்கல் இரண்டு சுழற்சியில் மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏனைய பல வங்கிகளும் இந்த வலையமைப்பில் வெகு விரைவில் இணைந்து கொள்ளுமென எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X