2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பங்குச்சந்தையின் மொத்தப்புரள்வு வீழ்ச்சி

A.P.Mathan   / 2013 ஜூலை 29 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


- பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலைவரங்கள் 
 
(ச.சேகர்)
 
கொழும்பு பங்குச்சந்தையின் பிரதான பங்குச்சுட்டி கடந்தவாரம் உயர்வடைந்து காணப்பட்ட போதிலும், மொத்தப்புரள்வு பெறுமதி முன்னைய வாரத்துடன் ஒப்பிடுகையில் கணிசமான அளவு வீழ்ச்சியை பதிவு செய்திருந்ததை அவதானிக்க முடிந்தது. மொத்தமாக கைமாற்றப்பட்ட பங்குகளின் எண்ணிக்கையிலும் கடந்தவாரம் வீழ்ச்சி காணப்பட்டது. தொடர்ந்தும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நாட்டம் குறைந்த அளவில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கடந்த புதன்கிழமை இலங்கை மத்திய வங்கியின் மூலம் நாணய மாற்றுக் கொள்கையில் தொடர்ந்தும் இறுக்கமான நிலை பேணப்படும் என்பது அறிவிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து, பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்களில் சற்று சரிவான நிலையை அவதானிக்க முடிந்தது.
 
கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 6,051.77 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3427.87 ஆகவும் அமைந்திருந்தன. 
 
ஜூலை 23ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 1,393,468,028 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 15,688 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 14,768 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 920 ஆகவும் பதிவாகியிருந்தன.
 
கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் சிலோன் பிரின்டர்ஸ், சிலோன் பிரின்டர்ஸ், ஆசிரி சென்ரல், எஸ்எம்பி லீசிங் மற்றும் ஃபின்லேஸ் கொழும்பு போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன. 
 
எஸ்எம்பி லீசிங் (சாதாரண), சிஐரி, பிசிஎச் ஹோல்டிங்ஸ், டீ ஸ்மோல் ஹோல்டர்ஸ் மற்றும் ஹியுஜே போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.


 
தங்கம் மற்றும் வெள்ளி விலை 
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 45,000 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 42,000 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. 
 
நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 133.23 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 205.48 ஆக காணப்பட்டிருந்தது. டொலரைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான ரூபாவின் பெறுமதியும் கடந்த வாரம் குறைவடைந்து காணப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .