2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை தொடர்பான தேசிய மாநாடு

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 16 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் உயர்கல்வி நிலையங்களுள் முதலிடத்தில் உள்ள இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகமானது, அண்மையில் மாலபே கம்பஸ் வளாகத்தில் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை (NCTM) தொடர்பான 3 ஆவது தேசிய மாநாட்டினை ஏற்பாடு செய்திருந்தது. தேசிய அபிவிருத்திக்கான தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை முன்னேற்றங்கள் எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற இந் நிகழ்வில், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தகவல் தொழில்நுட்பம், பொறியியல், மேலாண்மை மற்றும் தொடர்புடைய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

தகவல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் மேலாண்மை துறையில் சமீபத்திய விவகாரங்கள் மற்றும் வளர்ச்சி தொடர்பில் நடைபெற்ற நிகழ்வில், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் PIM, பணிப்பாளர் பேராசிரியர் மங்கள பொன்சேகா சமூக அறிவியல் ஆராய்ச்சி தொடர்பான மாற்று அணுகுமுறைகள் மற்றும் செயல்முறை எனும் தலைப்பின் கீழ் முக்கிய உரை நிகழ்த்தினார். மேலும் UK ஸெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகத்தின் பொருட்கள் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி நிலையத்தின் உதவி முதல்வர் பேராசிரியர் டெரன்ஸ் பெரேரோ பொருட்கள் மற்றும் விநியோக மேலாண்மை தொடர்பாக உரையாற்றினார்.

NCTM நிகழ்வினை ஏற்பாடு செய்த டாக்டர்.சமந்த தெலிஞ்சாகொட மற்றும் அவரது குழுவினரை பாராட்டிய பட்டதாரி கல்வி மற்றும் ஆராய்ச்சி பிரிவின் முதல்வர் டாக்டர்.கொலிய புளசிங்க, 'இந்த வருட தொனிப்பொருளின் கீழ், தேசிய பிரச்சனைகள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதை குறிக்கும் ஆராய்ச்சி ஆவணங்கள் மீது அதிக ஆர்வத்தை காட்டினோம். இத்தகைய மாநாடானது, இத்துறை குறித்து ஆராய்வுகளை மேற்கொள்வதில் ஆர்வமுள்ளோருக்கு ஓர் மைல்கல்லாக அமையும்' என தெரிவித்தார்.

இத்துறையில் ஆர்வம் கொண்டோர் கலந்துரையாடல்கள் மற்றும் துறையில் தம்மை பழக்கப்படுத்திக்  கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை தொடர்பான தேசிய மாநாட்டினை ஒழுங்கு செய்தமை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அனைத்து தலைப்புகளும் தேசிய அபிவிருத்தியுடன் தொடர்பினை கொண்டுள்ளதால், தாங்கள் தேர்ந்தெடுத்த துறை குறித்து மாத்திரமன்றி, தேசிய பிரச்சனைகள் தொடர்பான அறிவினையும் மேம்படுத்திக் கொள்வதற்கான வாயப்பு மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருந்தது' என SLIIT கல்வியகத்தின் தலைவரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பேராசிரியர்.லலித் கமகே தெரிவித்தார்.

NCTM 2014 நிகழ்வில் கல்வி மற்றும் தொழிற்துறை நிபுணர்களின் உரைகள் மற்றும் விவாதங்கள் இடம்பெற்றதுடன், 58 சமர்பிப்புகள், 23 ஆய்வு கட்டுரைகள் போன்றனவும் அங்கீகரிக்கப்பட்டன. பொறியியல், தகவல் முறைமைகள் மற்றும் கணினி நெட்வொர்க்ஸ், வர்த்தகம் மற்றும் மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக அபிவிருத்தி தொடர்பில் சமர்பிப்புகளை சமர்பிக்குமாறு ஆய்வாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆவணங்களை சமர்ப்பித்த அனைத்து ஆய்வாளர்களுக்கும் தமது எதிர்கால ஆய்வுச் செயற்பாடுகளை மேம்படுத்திக் கொள்ளும் வகையிலான மூன்றுக்கும் அதிகமான பரீசீலணை அறிக்கைகள் வழங்கப்பட்டன.

மேலும் A Risk Management Framework in the Cloud using Big Data and Security Informatics' எனும் தலைப்பின் கீழ் ஆவணங்களை சமர்ப்பித்த கே.டி.பி.எச்.சுபசிங்க, எஸ்.ஆர்.கொடிதுவக்கு மற்றும் எச்.எஸ்.சி.பெரேரா ஆகியோர் தங்க விருதை வென்றனர். மேலும் 'Student Centric Virtual Tutelage with Categorization and Progressive Perfection' ஆவணத்திற்கு எம்.பிரணவன், டி.என்.தயாரத்ன, ஏ.ஆர்.திலங்க, பி.ஆர்.விஜயவந்த மற்றும் சி.ஜே.விக்ரமரத்ன ஆகியோருக்கு வெள்ளி விருதும், 'Vee Bissa: Paddy Decision Support System' ஆவணத்திற்கு ஐ.ஏ.என்.பெர்னாண்டோ, ஜி.ஏ.டீகல, டபிள்யு.டி.ஆர்.சோமவர்தன, ஜி.சி.தசநாயக்க, ஏ.பெரேரா மற்றும் பி.எஸ்.ஹடல ஆகியோருக்கு வெண்கல விருதும் வழங்கப்பட்டன.

உத்தியோகபூர்வ தொழிற்துறை அனுசரணையாளர் IFS மற்றும் உத்தியோகபூர்வ கல்வி அனுசரணையாளர் UK ஸெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து SLIIT இம் மாநாட்டினை ஏற்பாடு செய்திருந்தது. இந் நிகழ்வின் சாரம்சம் வெளியீட்டிற்கான அனுசரணையை தேசிய அறிவியல் நிலையம் வழங்கியிருந்தது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .