2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

Deakin பல்கலைக்கழகத்தை உள்நாட்டு சமூகத்தினுள் கொண்டு வரும் SLIIT

A.P.Mathan   / 2015 ஓகஸ்ட் 02 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற  20 க்கும் அதிகமான வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் பங்காண்மைகளைக் கொண்டுள்ள SLIIT, பட்டப்படிப்புகளை தொடரும் மாணவர்களுக்கு தமது பட்டத்தை பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பை அல்லது SLIIT முதல் இரு வருடங்களை பூர்த்தி செய்த பின்னர் பங்காண்மை பல்கலைக்கழகங்களில் பூர்த்தி செய்யக்கூடிய வாய்ப்பை SLIIT வழங்குகிறது. 
    
இந்த ஆண்டு, அவுஸ்திரேலியாவின் Deakin பல்கலைக்கழகம், அம்பாறை மாவட்டத்தில் தன்னார்வ அடிப்படையில் 'அம்பாறை செயற்திட்டம்' எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் பங்களிப்பை முன்னெடுக்க தீர்மானித்திருந்தது. Deakin மாணவர்கள் கொழும்பை தளமாக கொண்டுள்ள Deakin பங்காளர் கல்வியகங்களின் இரு மாணவர்களும் இணைந்திருந்தனர். இந்த சமூக அடிப்படையிலான செயற்திட்டத்திலிருந்து அவர்களுக்கு பெருமளவு புதிய விடயங்களை அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்ததுடன், அவர்களின் கல்விப் பயணத்தில் மிகவும் பெறுமதி வாய்ந்த செயற்பாடாகவும் அமைந்திருந்தது.

SLIIT இலிருந்து தெரிவாகியிருந்த அச்சல உடகார இளங்ககோன் கருத்து தெரிவிக்கையில், 'இந்த தன்னார்வ குழுவில் பங்கேற்பது என்பது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாகும். இந்த அனுபவத்தை வழங்கியிருந்த SLIIT மற்றும் Deakin பல்கலைக்கழகங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். னுநயமin பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது' என்றார்.
    
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலிருந்து பிரதிநிதிகளைக் கொண்டுள்ள SLIIT, வருடாந்தம் பங்காண்மை பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பல்கலைக்கழக தின நிகழ்வை ஏற்பாடு செய்கின்றது. இதன் மூலம், SLIIT கல்வி நிகழ்ச்சிகள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடனான பங்காண்மைகள் போன்றன தொடர்பில் பெற்றோருக்கு விளக்கமளிக்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான இந்நிகழ்வு, செப்டெம்பர் 18 ஆம் திகதி மாலபே கம்பஸ் வளாகத்தில் இடம்பெறும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .