2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

Curtin பல்கலைக்கழகத்துடன் இணைந்து பொறியியல் பட்டப்படிப்பினை வழங்கும் SLIIT

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 26 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


SLIIT கல்வி நிலையமானது அவுஸ்திரேலியாவின் பிரபல Curtin பல்கலைக்கழகத்துடன் இணைந்து மாணவர்களுக்கு கட்டட மற்றும் கட்டுமான பொறியியல், கணினி முறை பொறியியல், Electrical Power Engineering மற்றும் இயந்திர பொறியியல் போன்ற பிரிவுகளில் புதிய பொறியியல்; பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது SLIIT நிலையமானது Sheffield Hallam University (SHU) - UK பல்கலைக்கழகத்துடன் இணைந்து MSc. in Telecommunication and Electronic Engineering, BEng in Electronic Engineering, and MEng. in Electrical and Electronic Engineering போன்ற பிரிவுகளில் கற்கைநெறிகளை வழங்கி வருகிறது. 'சர்வதேச பல்கலைக்கழகங்கள் மற்றும் உள்நாட்டு துறைகளுடனான SLIIT நிலையத்தின் பங்காண்மை ஊடாக பொறியியல் பிரிவில் மாணவர்களுக்கு கல்விசார் வாய்ப்புகளை வழங்கும் குறிக்கோளுடன் செயற்படுகிறோம். இத்துறைகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய வகையிலான மாணவர்களை உருவாக்கிடும் குறிக்கோளுடன் இப் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன' என SLIITஇன் பிரதான நிறைவேற்று அதிகாரியான பேராசிரியர் லலித் கமகே தெரிவித்தார்.

'இந்நான்கு வருட பட்டப்படிப்பானது தற்போதைய துறைசார் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இக் கற்கைநெறியில் இளம் எஞ்சினியரிங் பட்டதாரிகளுக்கு தகுந்த தொழிற்தகைமைகள் உள்ளடங்கிய பாடத்திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது' என SLIIT பொறியியல் பிரிவின் டீன் பேராசிரியர் அஷோக் பீரிஸ் தெரிவித்தார். மேலும் 'ஓராண்டுக் கற்கைநெறியில் உள்ளடக்கப்பட்டுள்ள பாடத்திட்டங்கள் அவுஸ்திரேலியாவின் பொறியியல் கல்வி நிலையத்தின் பாராட்டுகளை பெற்றுள்ளது. இப்பாடத்திட்டமானது அவுஸ்திரேலியாவின் பொறியியல் கல்வி நிலையத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ளதுடன், பட்டயக் பொறியாளார்களுக்கு (chartered engineer) அவசியமான கல்விசார் தகைமைகளையும் வழங்குகிறது. இப்பட்டதாரிகள் ஆலோசனை பொறியியல், பாரிய மற்றும் நடுத்தர ஒப்பந்தக்காரர், விசேட உப ஒப்பந்தக்காரர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் ஆகிய துறைகளில் வேலைவாய்ப்பினை தேட முடியும். மேலும் இப் பொறியியல் பட்டதாரிகள் சர்வதேச ரீதியாக வேலைவாய்ப்பினையும் பெற்றுக்கொள்ள முடியும்' என்றார்.

2013ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நோக்கில் SLIIT நிலையத்தில் புதிய பொறியியல் பிரிவு கட்டத் தொகுதியொன்றின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப்புதிய கட்டிடமானது 7000m2 நிலப்பரப்பில் உருவாவதுடன், 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கட்டிட நிர்மாணப்பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன. கட்டிடத்தின் அடித்தளத்தில் கட்டடப் பொறியியல் மற்றும் இலத்திரனியல் பொறியியல் ஆய்வுகூடம், இரண்டாம் மாடியில் இலத்திரனியல் மற்றும் Materials Engineering ஆய்வுகூடம் ஆகியன அமைக்கப்படவுள்ளன. இப்புதிய கட்டடத்தின் நான்கு மாடிகளிலும் சொற்பொழிவு அறை, பயிற்சி வகுப்பறைகள், Design ஸ்டூடியோ, நூலகசாலை போன்றவற்றிற்கு அவசியமான விசாலமான அறைகளும், மாணவர்களிற்கு ஆலோசனைகளை வழங்கும் பொருட்டு ஐந்தாவது மாடியில் பணியாளர் அறைகளும் அமைக்கப்படவுள்ளன. இப்பிரிவில் தற்போது 25 நிரந்தர பணியாளர்கள் உள்ளதுடன், அவர்களுள் ஆறு பேர் PhD பட்டம் பெற்றவர்களாவர். இதற்கு மேலதிகமாக அமெரிக்க பல்கலைக்கழகம் மற்றும் துறைசார் நிபுணர்களாக உள்ள சிரேஷ்ட பணியாளர்கள் வெளிக்கள முறை அடிப்படையில் வருகை தருகின்றனர்.

இலங்கையிலுள்ள சர்வதேச அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையமாக SLIIT திகழ்கிறது. இக் கல்வி நிலையத்தின் ஊடாக 18,000 தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். SLIIT நிறுவனத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட கல்விசார் தகைமை ஊடாக பட்டதாரிகள் பலர் இலங்கையின் வியாபாரம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் இலத்திரனியல் துறைகளில் முன்னோடிகளாக உள்ளனர். மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள www.sliit.lk என்ற இணையத்தள முகவரியை நாடவும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .