2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குருநாகல் நகரில் புதிய SLIIT கல்வி நிலையம் திறப்பு

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையில் பட்டதாரி கற்கைகளை வழங்கி வரும் முன்னணி கல்வி நிலையமான SLIIT ஆனது, தனது கல்வி பங்காளராகிய E-WIS உடன் இணைந்து குருநாகல் நகரில் தனது புதிய நிலையத்தை திறந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற இத் திறப்பு விழாவில் விருந்தினர்கள், பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
 
இலங்கையின் எப் பிரதேசத்திலிருந்தும் எளிதாக அணுகக்கூடிய வகையில் உள்ள இக் கல்வி நிலையமானது மாணவர்களிற்கு நட்புறவான கற்பித்தல் மற்றும் கற்றல் சூழலை வழங்குகிறது. இப் புதிய நிலையமானது IT ஆய்வுகூடங்கள், நூலக வசதிகள், விரிவுரை மண்டபங்கள், உள்ளக அரங்கம், வாசிப்பறை மற்றும் wireless இணைய அணுகல் வசதிகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
 
இப் புதிய நிலையத்தின் மூலம் தகவல் தொழில்நுட்பத்தில் விசேட கௌரவ B.Sc பட்டப்படிப்பு மற்றும் வணிக நிர்வாகத்தில் BBA பட்டப்படிப்புகளை முதல் ஆண்டில் தொடர முடிவதுடன், அதன் பின்னர், மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்பினை கொழும்பு SLIIT மெட்ரோபொலிடன் கம்பஸ் அல்லது SLIIT மாலபே கம்பஸில் பூர்த்தி செய்து கொள்ள முடியும். இதற்கு மேலதிகமாக, இந் நிலையத்தின் மூலம் CCNA, Web Development ஆகிய தொழில்முறை மேம்பாட்டு திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
 
இத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய கூட்டுறவு கைத்தொழில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, 'பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர்கல்வி அமைச்சின் அங்கீகாரம் பெற்ற தகவல் தொழில்நுட்ப துறையில் பட்டம் வழங்கும் மிகப்பெரிய கல்வி நிலையமாக SLIIT திகழ்கிறது. குருநாகல் நகரில் முழு வசதிகளுடனான நிலையத்தை அமைக்க வேண்டும் என்ற எனது வேண்டுகோளை நிறைவேற்றிய SLIIT நிர்வாகத்திற்கும், அதன் பங்காளராகிய E-WIS இற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்தின் வெற்றிக்கு தகவல் தொழில்நுட்பம் மிக முக்கியம் என்பதை நாம் அனைவரும் நன்கறிவோம். ஆகவே வயம்ப இளைஞர்களை IT நிபுணர்களாக உருவாக்குவதற்கு நான் ஆதரவளிக்கவுள்ளேன்' என தெரிவித்தார்.
 
SLIIT நிலையத்தின் தலைவர் பேராசிரியர்.எஸ்.கருணாரத்ன கருத்து தெரிவிக்கையில், 'எமது கல்வி பங்காளரான E-WIS உடன் இணைந்து SLIIT குருநாகல் நிலையத்தின் திறப்பு விழாவை அறிவிப்பதையிட்டு பெருமையடைகிறோம். கொழும்பு புறநகர்ப் பகுதியை சேர்ந்த மாணவர்களிற்கும் வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பதை நன்குணர்ந்த SLIIT ஆனது, மாத்தறை, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் பிரதேசங்களிலும் தனது நிலையங்களை நிறுவியுள்ளது. எமது கல்விச் சேவைகளை வயம்ப பிராந்திய மாணவர்களிற்கும் வழங்கும் நோக்கில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் குருநாகல் நகரில் SLIIT இன் புதிய நிலையத்தை ஸ்தாபித்துள்ளோம்' என்றார். 
 
மேற்கூறிய கற்கைகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் 2301904/ 0377204204 இற்கு அழைப்பை ஏற்படுத்தி அல்லது www.sliit.lk எனும் இணையத்தள முகவரி ஊடாக தகவல்களை பெறலாம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .