2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உடற் பாகத்தை மட்டும் மயக்கமுறச் செய்து வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை

Editorial   / 2018 ஒக்டோபர் 11 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

டேர்டன்ஸ் வைத்தியசாலையின் உள்வாரி இருதய சத்திர சிகிச்சை வைத்திய நிபுணரான வைத்தியர் பந்துல அத்தாவுட-ஆராச்சி அவர்களால் Ischemic இருதய வியாதி மற்றும் மோசமான சுவாசப்பை தொழிற்பாட்டையும் கொண்டிருந்த 82 வயது நிரம்பிய நோயாளி ஒருவருக்கு, முதன்முறையாக Balloon Expandable Transcatheter Aortic Valve Implantation (TAVI) எனப்படுகின்ற திறந்த இருதய அறுவைச் சிகிச்சையின்றிய முறையின் கீழ் வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நோயாளி முழுமையான சுயஉணர்வுடன் இருக்கும் நிலையில், எவ்விதமான சிக்கல்களுமின்றி, தேவையான பாகத்தை மட்டும் மயக்கச் செய்து இலங்கையில் இந்த வகையில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது அறுவைச் சிகிச்சை என்ற வரலாற்றை இது படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

கண்டியில் வசிக்கும் இந்த வயோதிப நோயாளி, இருதய இரத்தக் குழாய் அடைப்பு (Coronary Artery Disease) மற்றும் இருதயத்தில் இரத்தத்தை பாய்ச்சும் மற்றும் அதனை உடலுடன் இணைக்கின்ற வால்விலுள்ள குறைபாடு (Aortic Valve Disease) காரணமாக பாதிக்கப்பட்டதுடன், சுவாசிப்பதிலும் சிரமங்களை எதிர்கொண்டார்.

இதற்கு முன்னர் அவர் பக்கவாதத்தாலும் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Aortic வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை மற்றும் Bypass அறுவைச்சிகிச்சையை மேற்கொள்வதில் இந்த நோயாளி அதிக ஆபத்திற்குள்ளாகும் வாய்ப்பைக் கொண்டுள்ளதாக இருதய சத்திர சிகிச்சை நிபுணர்கள் கருதினர்.   

முன்னர் இந்த நோயாளிக்கு Stent ஒன்றும் பொருத்தப்பட்டதுடன், நீண்ட கால சிகிச்சை ஒன்று கிடைக்கும் வரையில் ஒரு தற்காலிகத் தீர்வாக, வைத்தியர் அத்தாவுட ஆராச்சி அவர்களால் Balloon Aortic Valvuloplasty (BAV) அறுவைச் சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எனினும் நோயாளின் உடல்நிலை தொடர்ந்தும் மோசமடைந்து சென்றமையால், Transcatheter Aortic Valve ஐப் பொருத்துவதற்காக வைத்தியசாலையில் மருத்துவ தொழில்தர்ம சபையிடம் அனுமதியைக் (முதன்முறையாக மேற்கொள்ள ப்பட்டமையால்) கோரியிருந்தார்.

வைத்தியர் அத்தாவுட ஆராச்சி அவர்கள் ஐக்கிய இராச்சியத்தில் ஒரு வைத்திய நிபுணராகப் பெற்றுக்கொண்ட அனுபவம் மற்றும் TAVI சான்று அங்கிகாரம் ஆகியனவும், வால்வு கிடைக்கப்பெற்றி ருந்தமையும் முதன்முறையாக இத்தகைய அறுவைச்சிகிச்சையொன்று மேற்கொள்ளப்படுவதை சாத்தியமாக்கின.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .