2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மாற்றத்துக்காக மாணவர்களுடன் இணையும் DFCC வங்கி

Editorial   / 2018 ஜூலை 10 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரணல, தெடிகமுவ கனிஷ்ட வித்தியாலயத்தில் மரநடுகைப் பிரச்சாரத்தை முன்னெடுத்ததன் மூலம் DFCC வங்கி உலக சுற்றாடல் தினத்தை அனுஷ்டித்தது. 

பாடசாலை மாணவர்களுடன் இணைந்து, DFCC வங்கியின் நிலைபேறு பிரிவானது 50 பழ மரக்கன்றுகளை நாட்டிய அதேவேளை, வங்கியின் சமூகச் செயற்றிட்டங்களுக்கான அணியானது, புதிதாக நாட்டப்பட்ட மரங்களை, மாணவர்கள் பராமரிப்பதற்குத் தேவையான விவசாய மற்றும் தோட்ட வேலைகளுக்கான கருவிகளை நன்கொடையாக வழங்கியது.  

தெடிகமுவ கனிஷ்ட வித்தியாலயத்தின் அனைத்து ஊழியர்களும் மாணவர்களும் பெரும்பாலான பெற்றோர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வைப்  பாடசாலையில் உதவி அதிபர் சுருக்கமான உரையுடன் ஆரம்பித்து வைத்தார். உலக சுற்றாடல் தினம் மற்றும் மரநடுகையின் முக்கியத்துவத்தை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.   

DFCC வங்கியின் நிலைபேறு பிரிவின் உறுப்பினர்களான சேனக்க ஜயசிங்க, ருவினி ஹெட்டியாரச்சி ஆகியோரால் விவசாயக் கருவிகளும் ஏனைய உபகரணங்களும் பாடசாலையிடம் கையளிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, பாடசாலை மைதானத்தைச்சூழ மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் DFCC வங்கியின் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளால் மரங்கள் நாட்டப்பட்டன. 

அனைத்து மரங்களும் நாட்டப்பட்டதன் பின்னர், பாடசாலையில் உள்ள ஒவ்வொரு வகுப்புக்கும் ஐந்து மரங்களைப் பார்த்துக் கொள்வதற்கான பொறுப்பு வழங்கப்பட்டது. 

இதன் மூலம் தாவரங்களுக்கான உயிர்தப்பியிருத்தல் சதவீதத்தை உறுதிசெய்து கொள்ளமுடிவதுடன், இந்த முயற்சி வெற்றியடையவும் துணை புரியும்.  

DFCC வங்கியின் உலகச் சுற்றாடல் தின நிகழ்வு குறித்துக் கருத்துத் தெரிவித்த, DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி லக்ஸ்மன் சில்வா, “இந்தச் சுற்றாடல் தினத்தில், தெடிகமுவ கனிஷ்ட வித்தியாலயத்தில் மரம் நாட்டல் பிரச்சாரத்தை முன்னெடுப்பதன் மூலம், பொறுப்புள்ள பெருநிறுவனப் பிரஜைகளாக எமது கடமையை நிறைவேற்றவும் சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம். சுற்றாடலையும் இயற்கை வளங்களையும் காப்பதன் முக்கியத்துவத்தை எமது இளைஞர்களுக்குக் கற்பிப்பதன் பெறுமதியை அறிந்து வைத்துள்ளோம். பாடசாலை மாணவர்கள் மேலும், சுற்றாடலுக்குச் சினேகமான பயிற்சிகள் மற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இந்தத் திட்டமானது தூண்டுதலாக அமையும் என நம்புகின்றோம். 2017ஆம் ஆண்டு உலக சுற்றாடல் தினத்தில், நாம் 100 மரக்கன்றுகளை நாட்டிய அத்துருகிரிய கொறதோட்டை சோமானந்த வித்தியாலயத்துக்கு, இந்த உலகச் சுற்றாடல் தினத்தில் விஜயம் செய்தமை மற்றுமொரு முக்கிய விடயமாகும். ஒரு வருடத்துக்கு முன்னர், நாம் நாட்டிய அனைத்து மரக்கன்றுகளும் வளர்ந்திருக்கின்றமையைக் காணும் போது, பெருமிதம் வருகின்றது. எதிர்காலத்திலும் இவ்வாறான மரநடுகைச் செயற்றிட்டங்களில் ஈடுபடவும், நாடெங்கிலும் உள்ள இளைஞர்களுடன் பணியாற்றவும் எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.  
வங்கியின் பிரதான விழுமியங்களில் ஒன்றான, சமூகம் மற்றும் சுற்றாடலைப் பராமரித்தல் மற்றும் சுற்றாடலைப் பாதுகாத்தலுக்கு DFCC வங்கி அர்ப்பணிப்புடன் உள்ளது. 

சுற்றாடல் ரீதியாக இணக்கமான கொள்கைகளை உள்வாங்குமாறு, தமது வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு வங்கி தொடர்ந்தும் ஊக்கமளித்து வருகின்றது. 

சமூக மற்றும் சுற்றாடல் விடயங்களை அடையாளப்படுத்துவதற்கு சமூகத்துடன் தன்னார்வமாகப் பணியாற்ற மற்றும் இணைவதற்கு ஊழியர்கள் வரவேற்கப்படுகின்றனர். நிலைபேறு தன்மை மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு சார்ந்த, எண்ணக்கருக்கள் தொடர்பில் கற்பிப்பதற்கான பிரதான பொறுப்பை DFCC வங்கி ஏற்கின்றது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .