2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ICASL விருதுகள் வழங்கல் 2017இல் யூனியன் அஷ்யூரன்ஸுக்கு இரு விருதுகள்

Editorial   / 2017 டிசெம்பர் 19 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை பட்டயக்கணக்காளர் நிறுவனத்தினால் (ICASL) அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்த நிதி அறிக்கைகள் விருதுகள் வழங்கும் நிகழ்வில் நிதி மற்றும் நிதிசாரா அறிக்கையிடல் விருதுகள் வழங்கும் நிகழ்வில் இலங்கையின் பொருளாதாரத்தில் பங்களிப்பு வழங்கும் சகல நிறுவனங்களுக்கும் கௌரவிக்கப்பட்டிருந்தன.

காப்புறுதி பிரிவில் வெள்ளி விருதை யூனியன் அஷ்யூரன்ஸ் சுவீகரித்திருந்ததுடன், கூட்டாண்மை மேலாண்மை வெளிப்படுத்தல்களில் வெள்ளி விருதையும் நிறுவனம் சுவீகரித்திருந்தது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் இரு விருதுகளைப்பெற்ற ஒரே காப்புறுதி நிறுவனம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சியின் நிதி மற்றும் திட்டமிடல் பொது முகாமையாளர் ஷெரின் காதர் தெரிவிக்கையில், “வெளிப்படைத்தன்மை, சிறந்த மேலாண்மை மற்றும் சிறப்பை பேணுகின்றமைக்காக தொடர்ச்சியாக நாம் கௌரவிக்கப்பட்டுள்ளமையையிட்டு பெருமை கொள்கிறோம். நம்பிக்கையை பேணுகின்றமைக்காக நிறுவனத்துக்குக் கிடைத்துள்ள கௌரவிப்பாக இந்த விருதுகள் அமைந்துள்ளன. எனவே, இந்த விருதுகளை எமது சகல பங்காளர்களுக்கும் சமர்ப்பிப்பதற்கு நாம் எதிர்பார்க்கிறோம். யூனியன் அஷ்யூரன்ஸின் வெற்றியில் இவர்கள் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளனர்” என்றார்.

‘நம்பிக்கை’ எனும் உறுதி மொழிக்கமைய யூனியன் அஷ்யூரன்ஸ் வர்த்தக நாமம் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதுடன், வெளிப்படையான வகையிலும், சௌகரியமான வகையிலும், மதிப்புடன் சகல பங்குதாரர்களுடன் கொடுக்கல் வாங்கல்களையும் மேற்கொள்கிறது. இது நிறுவனத்தின் வருடாந்த அறிக்கைகளில் அதிகளவில் பிரதிபலிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .