2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

காதலர்களை பாதுகாக்க ‘காதல் கொமாண்டோ’

A.P.Mathan   / 2010 ஜூலை 15 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கௌரவம் என்ற பெயரில் பல காதலர்கள் அநியாயமாக படுகொலை செய்யப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 1000இற்கும் மேற்பட்ட காதலர்கள் 'கௌரவம்' என்ற போர்வையில் கொல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கொலைகளுக்கு பஞ்சாயத்து தலைவர்கள் முதல் காவலதிகாரிகள்வரை பலரும் உதவிவருவதாக குற்றம் சாட்டியிருக்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.

இந்நிலையில் பாதிக்கப்படும் காதலர்களுக்கு உதவுவதற்காக ‘காதல் கொமாண்டோ’ என்ற அமைப்பினை டெல்லியின் வடமத்திய பகுதியில் தொடங்கியிருக்கிறார்கள். இந்த அமைப்பில் நடிகர்கள், பொதுமக்கள் மற்றும் ஓய்வுபெற்ற காவல்துறையினர் போன்றோர் உள்ளடங்கியிருக்கின்றனர்.

ஊர் பெரியோர், பெற்றோர் போன்றவர்களால் பாதிக்கப்படுகின்ற காதலர்கள் இந்த அமைப்புடன் 24 மணித்தியாலங்களும் தொடர்புகொள்ளலாம். அப்படி பாதிக்கப்படுகின்ற காதலர்களுக்கு இந்த 'கொமாண்டோ' அமைப்பினர் முழு பாதுகாப்பு வழங்க தயாராக இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் தேவைப்படுகின்ற சட்ட ஆலோசனைகளையும் இவ்வமைப்பு வழங்கவுள்ளது.

வீட்டைவிட்டு ஓடிவருகின்ற காதலர்களுக்கு தங்களுடைய அமைப்பினூடாக திருமணம் செய்து வைப்பதுடன், அதன் பின்னர் அவர்களுக்கு எந்தவித தொந்தரவுகளும் வராமலும் பார்த்துக்கொள்வதாகவும் அந்த அமைப்பு மேலும் அறிவித்திருக்கிறது.

காதலர்கள், 'கௌரவ கொலை' செய்யப்படுவது இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகில் பல நாடுகளிலும் இப்பொழுது அரங்கேறி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .