2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மீண்டும் அக்ஷன் பார்க்

Menaka Mookandi   / 2014 ஜூலை 03 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆறு பேரை பலிகொண்ட நிலையில் மூடப்பட்ட, உலகிலேயே மிகவும் அபாயகரமான அக்ஷன் பார்க் எனப்படும் விநோத பூங்கா, 20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
 
அமெரக்காவின் வடகிழக்கு மற்றும் மத்திய அட்லாண்டிக் பகுதிகளின் ஒரு மாநிலமான நியூ ஜெர்சி என்ற இடத்திலேயே இந்த விநோத பூங்கா அமைந்துள்ளது.

சுமார் 35 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இப்பூங்காவில் ஆறு பேர் உயிரிழந்ததுடன் 100க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் கடந்த 1996ஆம் ஆண்டு பல்வேறுபட்ட ணிறைப்பாடுகளுக்கு இணங்க மூடப்பட்டது.

இப்பூங்காவிற்கு வருகை தருவோரில் 10 பேராவது ஒரு நாளைக்கு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவர். இருந்தும் இதற்கான கேள்வி குறையவில்லை.

காரணம் இவ்வாறான அதிரடி நடவடிக்கைகளையும் விளையாட்டுக்களையுமே மக்கள் விரும்புகின்றனர் என்று பூங்கா நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
 
இப்பூங்காவிற்கு சென்ற எவரும் திரும்பி அங்கு போய் விளையாடுவது பற்றி நினைக்கக்கூட பயமாக இருக்கும் என்று தெரித்துள்ளனர்.

சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடனேயே இந்த பூங்கா மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள பூங்காவின் உரிமையாளர், இங்கு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் ணின்னெடுக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .