2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கார்மேல்நகர் குடிநீர் பிரச்சினை: ‘6 மாதத்துக்குள் நிரந்தரத் தீர்வு’

Editorial   / 2019 நவம்பர் 27 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட கார்மேல்நகர் கிராம மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு, எதிர்வரும் 6 மாத காலத்துக்குள் நிரந்தரத் தீர்வு பெற்றுத்தரப்படுமெனத் தெரிவித்த முசலி பிரதேச சபை தவிசாளர் எம்.சுபிஹான், குறித்த கிராம மக்களின் அவசர குடிநீர் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு, முசலி பிரதேச சபையால் வாரத்துக்கு 5,000 லீற்றர் குடிநீர் வழங்கி வைக்கப்படுமெனவும் கூறினார்.

முசலி பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில், நேற்று (26) நடைபெற்ற கார்மேல்நகர் கிராம மக்களுடனான குடிநீர் பிரச்சினை தொடர்பான அவசரக் கூட்டத்தின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு, இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், கார்மேல் நகர் கிராமத்தில் இருந்து ஆழ்துளை கிணறு மூலமாக வேறு இடங்களுக்கு குடிநீர் செல்வதாகவும் தெரிவித்தார்.

நீர் சபை, மாகாண சபை, திணைக்களங்களிடம் பேசி, குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நிதிகளைப் பெற்று, கார்மேல் நகர் கிராமத்திலும் முசலியில் பல கிராமங்களிலும் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படுமெனவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .