2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தேவைப்படும் நிதி தொடர்பில் கோரிக்கைகள் சமர்பிப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையில் விபத்துச் சேவைப்பிரிவினை அமைப்பதற்கும் அதற்கான உபகரணங்களுக்கும் சுமார் 900 மில்லியன் ரூபாய் நிதி தேவையென, மதிப்பீடு செய்யப்பட்ட அதற்கான கோரிக்கைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலை பல்வேறு தேவைப்பாடுகள் கொண்ட ஓர் வைத்தியசாலையாக காணப்படுவதுடன், விபத்துச் சேவைப்பிரிவு ஒன்றினை அமைக்கவேண்டும் என்ற அவசியத்தை பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, ஏ 9 வீதியில் வவுனியா வைத்தியசாலையிலிருந்து 74 கிலோமீற்றர் தொலைவிலும், யாழ்ப்பாணம் வைத்தியசாலையிலிருந்து 68.5 கிலோமீற்றர் தொலைவிலும், அமைந்துள்ள இந்த வைத்தியசாலையில் இதுவரை விபத்துச்சேவைப்பிரிவு அமைக்கப்படாத நிலையில், பல்வேறு சிரமங்கள் காணப்படுவதுடன், உயிராபத்துக்கள் கூட ஏற்படும் அபாயநிலை காணப்படுகின்றது.

இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையில் விபத்துச்சேவைப்பிரிவினை அமைப்பதற்கான திட்டமுன்மொழிவுகள் மத்திய சுகாதார அமைச்சுககு அனுப்பி வைக்கப்பட்டுள்ளவென, பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, விபத்துச்சேவைப்பிரிவிற்கான கட்டடம் அமைப்பதற்கு 450 மில்லியன் ரூபாவும் அதற்கான உபகரணங்களின் தேவைகளுக்கு 450 மில்லியன் ரூபாவும் தேவையென மதிப்பீடு செய்யப்பட்டு, அதற்கான திட்டமுன்மொழிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதற்கான நிதி கிடைக்கும் பட்சத்தில் விபத்துப்பிரிவினை அமைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .