2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பண மோசடி செய்தவர் கைது

Editorial   / 2017 மே 27 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கடமையாற்றி வரும் ஆசிரியர்கள் மூவருக்கு வடமாகாண கல்வி அமைச்சினுடாக, குறைந்த விலையில் மோட்டார் சைக்கிகளை வழங்குவதாக தெரிவித்து ஒவ்வொரு ஆசியர்களிடமிருந்தும் தலா 51 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட ஆசியர்களுக்கு குறித்த பணத்தொகை பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பின்தங்கிய கிராமங்களில் வாழுகின்ற பொதுமக்களிடம் பல்வேறு வகையான மோசடிகள் செய்யப்பட்டு பெருந்தொகையான பணம் வசூலிக்கப்படுகின்றது.

குறிப்பாக வீட்டுத்திட்டங்கள் பெற்றுத்தருவதாகவும் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுத்தருவாதாகவும் போலி விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்து பதிவுக்கட்டணம், இதரக்கட்டணங்கள் என பெருமளவான  பணம் மோசடி செய்யப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில், கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில்  அதிபரின் தொலைபேசிக்கு 076-8689726 என்ற இலக்கதக்தில் இருந்து தொடர்புகொண்டு தான் வடக்கு மாகாண கல்வி அமைச்சில் பணியாற்றுவதாகவும் தூர இடங்களில் இருந்து வருகின்ற ஆசிரியர்களுக்கு வரி நீக்கம் செய்ப்பட்ட  மோட்டார் சைக்கிள்களை பெற்றுக்கொடுப்பதாகவும் இதற்காக மூன்று  ஆசியர்களை குறித்த பாடசாலையில இருந்து தெரிவு செய்து தருமாறு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மூன்று ஆசியர்களும் தொலைபேசியில தொடர்புகொண்டு 093012788576101 என்ற செலான் வங்கிக் கணக்கிலக்கத்துக்கு பணத்தை வைப்பிலிடுமாறு தெரிவித்ததையடுத்து, குறித்த கணக்கு இலக்கத்துக்கு வங்கியில் பணத்தை வைப்பிலிட்டிருந்தனர்.

இதனையடுத்து, குறித்த நபர் தொடர்பில் ஓர் ஆசிரியருக்கு எழுந்த சந்தேகம் தொடர்பாக சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, குறித்த வங்கியில் இருந்து பணத்தை மீளப்பெறுவதற்கு, இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த நபரை தந்தரமாக இரு ஆசியர்கள் நேற்று (26) வங்கிக்கு அழைத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கி அதையடுத்து, குறித்த நபரைக் கைது செய்த பொலிஸார், வங்கியில் இருந்த பணத்தை பெற்று பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்கியிருந்தனர்.

இதேவேளை, குறித்த நபர் உருத்திபுரம் பகுதியில் வீட்டுத்திட்டம், வாழ்வாதாரம் என்பவற்றை வழங்குவதாக, அன்றாடம் கூலி வேலை செய்து வாழும் குடும்பம் ஒன்றிடம் இருந்து பகுதி பகுதியாக 68 ஆயிரம் ரூபாயை மோசடி செய்துள்ளார்.

இந்நிலையில், குறித்த நபரை  பொலிஸார் உரிய நடவடிக்கைகள் இன்றி விடுவித்திருப்பதும் இவ்வாறு மோசடிகளுக்கு துணைபோவதாகவே பல்வேறு தரப்பினரும்  விசனம் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .