2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மக்களிடம் நிதி கோரும் பிரதேச செயலகம்

Editorial   / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன் 

ஜனாதிபதி பொதுமக்கள் தேசிய நிகழ்ச்சித் திட்டம் - 2018 நடமாடும் சேவையை நடத்துவதற்கான பணத்தை, பொதுமக்களிடம் இருந்து வசூலித்துத் தருமாறு, தெல்லிப்பளைப் பிரதேசச் செயலகத்தால் கிராம அபிவிருத்தி சங்க பிரநிதிகளுக்கு எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கடிதம், கிராம அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகளுக்கு, அனுப்பிவைக்கப்பட்டுள்ளது

அக்கடிதத்தில், எமது பிரதேசச் செயலகப் பிரிவுக்கான மேற்படி நடமாடும் சேவை, சனிக்கிழமை (15) தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் நடைபெறவுள்ளதாகவும் இதில் 3,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு சேவைகளை பெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படுதாகவும் குறிப்பிடப்ட்டுள்ளது.

இந்நிலையில், இந்தச் சேவை பெறுதலில் எமக்கும் பொதுமக்களுக்கும் பல்வேறு வகையான இதர செலவீனங்கள் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளததாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், ஆகையால், தங்கல் பிரிவுள்ள நலன்விரும்பிகள், சமூக ஆர்வலர்கள் மூலம் இந்நிகழ்வுக்கு ஏற்படும் செலவீனங்களுக்காக இயன்ற அன்பளிப்புத் தொகையைச் சேகரித்து தருமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நடமாடும் சேவை இடம்பெறும் பிரேதசக் கிராம சேவர்கள் தலா 25,000 ரூபாயைச் சேகரித்துத் தருமாறு, பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கிராம சேவர்களுக்கான கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக, கிராம அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்கள் விசனம் தெவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .