2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மன்னாரில் சர்வமத குழுக் கூட்டம்

Editorial   / 2020 ஜனவரி 07 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட் 

மத ரீதியாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக, மன்னார் மாவட்டத்திலுள்ள சர்வ மத குழு பிரதிநிதிகளை உள்ளடக்கி ஏற்பாடு செய்யப்பட்ட பிரதேச சர்வமத குழுக் கூட்டம், இன்றைய தினம், தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில், அதன்  பிராந்திய இணைப்பாளர் எம்.யூ.எம். உவைஸ் தலைமையில், தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

பன்மைத்துவம், நீதியின் ஆதிக்கம் ஆகியவற்றை பலப்படுத்துவதன் மூலம் 'சமய சகவாழ்வை கட்டியெழுப்புவோம்' எனும் தொனிப்பொருளில், மாவட்ட ரீதியில் காணப்படுகின்ற மத ரீதியான பிரச்சினைகளை அடையாளம் கண்டு, புரிந்துணர்வு மூலம் குறித்த பிரச்சினைகளை தீர்த்து வைப்பது தொடர்பாக கலந்தாலோசிக்கும் முகமாக இந்நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டது. 

குறித்த நிகழ்வுக்கு சர்வமதத் தலைவர்கள், அரச அலுவலர்கள், கிராம அலுவலர்கள், சமூக பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

குறித்த நிகழ்வில், அண்மைக்கலமாக மன்னார் மாவட்டத்தில் அதிகரித்து வரும் மத ரீதியான முரண்பாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் புதிய பிரச்சினைகள் தோற்றம் பெறாமல் பாதுகாப்பது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டன.

குறித்த குழுவானது, இம்மாதம் 20,21,22ஆம் திகதிகளில் பேருவெல சர்வமத குழுவினருடன்  நல்லிணக்க விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .