2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மன்னாரில் வெள்ளத்தால் 17,339 பேர் பாதிப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 28 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)


மன்னார் மாவட்டத்தில் கடும் மழையாலும் வெள்ளப்பெருக்காலும்  சுமார் 4,229 குடும்பங்களைச் சேர்ந்த 17,339 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார், நானாட்டான், முசலி, மடு, மாந்தை மேற்கு ஆகிய 5 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களே கடும் மழையாலும் வெள்ளப்பெருக்காலும் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் எம்.ஏ.சி.றியாஸ் தெரிவித்தார்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 1,307 குடும்பங்களைச் சேர்ந்த 4,623 பேர் 17 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

மன்னார் நகர் பகுதியிலுள்ள சாந்திபுரம், சௌத்பார், எமிழ் நகர், கோந்தைப்பிட்டி ஆகிய கிராமங்களும் தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதேவேளை, மன்னார் நொச்சிக்குளம் பகுதியிலுள்ள 2 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதால் இக்கிராமத்திலுள்ள 75 குடும்பங்கள் வெளியேறியுள்ளனர்.  அத்துடன், வெள்ளத்தால் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாழையடி, புதுக்குளம், தேவன்பிட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களும் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதற்கிடையில் பருப்புக்கடந்தான் குளமும் உடைப்பெடுக்கும் நிலையிலுள்ளது.

பாலியாறு, பறங்கியாறு, நாயாறு ஆகிய ஆறுகள்  பெருக்கெடுத்தமையால்  ஏ - 32 வீதி மூடப்பட்டுள்ளதுடன், வெள்ளத்தால் நாயாத்து வழி வீதி முற்றாக பாதிப்படைந்தமையால் இவ்வீதியூடான போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளன.

மேலும் மடு - பாலம்பிட்டி பிரதான வீதி, மன்னார் மதவாச்சி பிரதான வீதி, மடு - பெரிய தம்பனை பிரதான வீதி ஆகியவற்றின் போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளன.



You May Also Like

  Comments - 0

  • janakiraman Friday, 28 December 2012 01:00 PM

    செய்திகளை நாங்கள் தமிழகத்திலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .