2024 மே 08, புதன்கிழமை

கிளிநொச்சியில் "வடக்கின் துரித மீ்ட்சித்திட்ட பணிமனை திறப்பு

Menaka Mookandi   / 2010 நவம்பர் 19 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

கிளிநொச்சியி்ல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிறந்த தினத்தையொட்டி வடக்கின் துரித மீட்சித்திட்டப் பணிமனை திறந்து வைக்கப்பட்டுள்ளது.  கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள இந்தப் பணினையின் திறப்பு விழா நிகழ்வு ஜனாதிபதியி்ன் பிறந்த தினத்தையொட்டி நேற்று நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான முருகேசு சந்திரகுமார் கலந்து கொண்டார். இந்தப் பணிமனையின் பெயர்ப்பலகையை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் திரைநீக்கம் செய்து வைத்தார்.

பணிமனையை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.முருகேசு சந்திரகுமார் திறந்து வைத்து உரையாற்றினார். அவர் தனது உரையில் குறிப்பிடும்போதுஇ 'இப்போது உருவாகியிருக்கும் புதிய சூழலில் எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்கும் எமது மக்களின் மீள் வாழ்வுக்கும் நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. ஜனாதிபதியின் பிறந்த தினத்தில் இந்தப் பணிமனைகூட திறந்து வைக்கப்பட்டிருப்பது இதற்கு நல்ல உதாரணம்.  

அபிவிருத்தியில் மக்கள் முழு ஆர்வத்தோடு பங்கேற்க வேண்டும். அபிவிருத்திக்காக ஒதுக்கப்படுகின்ற பெருமளவு நிதியை தனியே ஒரு சிலர் எடுத்துக் கொள்வதற்கோ அல்லது நிர்வாக அதிகாரிகள் துஸ்பிரயோகம் செய்வதற்கோ இடமளிக்காமல் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கான ஒதுக்கீடுகள் மக்களைச் சென்றடையும்.

துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் விடைகொடுக்கும் காலம் ஒன்று பிறந்திருக்கிறது. இந்தப் புதிய காலத்தோடு எங்கள் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பற்கான வழிமுறைகளையும் நாம் காணவேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X