2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் நடவடிக்கை

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 29 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவரத்தினம்)

வவுனியாவில் கட்டாக்காலியாக திரியும் கால்நடைகளை பிடிக்கும் நடவடிக்கை நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா நகரசபையின் உபதலைவர் எம்.எம்.ரதன் தெரிவித்தார்.

வவுனியா நகரப்பகுதியில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் காணப்படுவதாகவும் இதன் காரணமாக விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டினர். இதனைத் தொடர்ந்து நகரசபைக் கூட்டத்தில் கட்டாக்காலி மாடுகளை பிடித்து உரிமையாளர்களிடம் தண்டம் அறவிடுவதென ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறான நடவடிக்கை கடந்து சில மாதங்களுக்கு முன்னரும் நகரசபையால் முன்னெடுக்கப்பட்டு உரிமையாளர்கள் தமது கால்நடைகளை பொறுப்பேற்காத நிலையில் அக்கால்நடைகள் ஏலத்தில் விடப்பட்டிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .