2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நவிபிள்ளையிடம் முறையிட்டோர் மிரட்டப்பட்டுள்ளனர்: சிவசக்தி ஆனந்தன்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 22 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

'சமீபத்தில் வருகை தந்த ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்புப் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் தமது சொந்த காணிகளில் குடியேற்றுமாறு முறையிட்டோர் மிரட்டப்பட்டும் புகைப்படம் எடுக்கப்பட்டும் உள்ளனர்' என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

'கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகியும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மீள்குடியேற்ற கிராமமான கேப்பாப்புலவு மக்களின் அடிப்படை வசதிகள், பூரணப்படுத்தப்படாமல் மக்கள் அவதிப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'கடந்த 27.9.2012 அன்று ஆனந்தகுமாரசாமி மற்றும் கதிர்காமர் முகாம்களில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு மீள்குடியேற்றப்பட்ட 165 குடும்பங்களும் வெளிப்பதிவினூடாக குடியேறிய 185 குடும்பங்களுமாக குடியேறியுள்ள 350 குடும்பங்களில் அனேகமானோர் தற்காலிக கொட்டகை வீடுகளிலிலே வசித்து வருகின்றனர்.

இவர்கள் வீட்டு வசதிகள், மலசலகூடங்கள், சுகாதாரமான குடிநீர் என்பன இன்றி அவதிப்பட்டு வருவதுடன் அநாதரவாக கைவிடப்பட்ட நிலையில் உள்ளனர்.

யுத்தம் இடம்பெறுவதற்கு முன்னர் இக் கிராம மக்களின் வாழ்வாதாரமாக விவசாயமும் கால்நடை வளர்ப்பும் காணப்பட்டது. தமது சொந்த பொருளாதார பலத்தில் வாழ்ந்த இம் மக்களின்  2000 ஏக்கருக்கும் அதிகமான குடியிருப்பு மற்றும் விவசாய காணிகளை இராணுவம் அபகரித்துள்ளது.

அங்கு உயர் பாதுகாப்பு வலயம், எனப் பிரகடனப்படுத்தப்பட்டு தமது குடும்பங்களையும் குடுயமர்த்தியுள்ளனர்.

இதனை எதிர்த்தும் தமது பூர்வீக காணிகளை மீள வழங்கமாறும் அக் கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஏற்கனவே, மனித உரிமை ஆணைக்குழு ஊடாக வழக்குத்தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் இவர்களது 2000 க்கு மேற்பட்ட கால்நடைகள் இராணுவ வலயத்தினுள் அகப்பட்டுள்ளதுடன் அவற்றில் பல நூற்றுக் கணக்கானவை வியாபாரிகள் ஊடாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இடம்பெயர்ந்து முகாமில் இருந்து வந்து மீள் குடியேறியோருள் இதுவரை 100 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ள போதும் வெளிப்பதிவில் வந்தோர் அடங்கலாக 250 குடும்பங்களுக்கு மலசலகூடங்கள், தண்ணீர்வசதி, உட்பட வீட்டு வசதிகள் அமைக்கப்படவில்லை.

அமைக்கப்பட்டுள்ள குழாய் கிணறுகளின் நீர் குடிப்பதற்கோ அல்லது வேறு தேவைகளுக்கோ உகந்ததாயில்லை. தாழ்வான பகுதிகளில் 50 குடும்பங்கள் விடப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை.

இதனைவிட இம்மக்கள் இராணுவ அழுத்தங்களுக்கும் உட்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சமீபத்தில் வருகை தந்த ஜ.நா மனித உரிமைகள் கண்காணிப்புப் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் தமது சொந்த காணிகளில் குடியேற்றுமாறு முறையிட்டோர் மிரட்டப்பட்டும் புகைப்படம் எடுக்கப்பட்டும் உள்ளனர்.

அரசால் புறக்கணிக்கப்பட்டும்   இராணுவ அழுத்தங்களுக்கு உட்பட்டும் பெரும் அவலங்களுக்குள்ளான நிலையில் வாழும் இக் கிராம மக்களின் அவசர அத்தியாவசியத் தேவைகளான மலசலகூடம், தண்ணீர் வசதி, வீடுகள் என்பன வழங்கப்படவும் அம் மக்களின் நிம்மதியான வாழ்க்கையை இராணுவம் குழப்புவதை தடுத்து அவர்களின் பூர்வீக காணிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

இதேவேளை, பருவமழை ஆரம்பித்துள்ளமையயால் அவசரமாக உரியநடவடிக்கைகளை எடுக்குமாறும் முல்லை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரியள்ளதாகவும், அவரும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்ததர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .