2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கிளிநொச்சியில் 86,734 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி

Editorial   / 2018 பெப்ரவரி 09 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

“உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் 100 வாக்களிப்பு நிலையங்களில் 86,734 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்” என கிளிநொச்சி மாவட்ட தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி  சபைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து  ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கிளிநொச்சியில் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச   சபைகளுக்கு 66 பிரதிநிதிகளை தெரிவு செய்வதுக்காக 638 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் கடமைகளில் 1500 அரச உத்தியோகத்தர்களும், 300 பொலிஸாரும் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு விசேட அதிரடிப்படையினர், சிவில் பாதுகாப்பு படையினர் ஆகியோரும் தேர்தல் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இன்றுவரை (9) 71 தேர்தல் விதிமுறை மீறல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்கள்  வாக்களிக்க  செல்லும் போது அவர்களுக்கு இடையூறுகள்  ஏற்படுத்தப்பட்டால்  முறைப்பாடு செய்வதுக்கும் விசேட மத்திய நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் தொலைபேசி இலக்கமான 0213900154  க்கு தொடர்பை ஏற்படுத்தி முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும். வாக்காளர்கள் முடியுமானவரை காலை வேளையிலேயே சென்று தங்களது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும்” என தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .