2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தமிழ்க் கட்சிகளின் ஒன்றிணைவு: ‘பெரும்பான்மையினத்துக்கு பலமாக அமையும்’

Editorial   / 2020 பெப்ரவரி 14 , பி.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

“தமிழர்களின் இருப்புகளை இல்லாமல் செய்வதற்கு பெரும்பான்மையினத்தவர்கள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கின்ற இவ்வேளையில், பெரும்பான்மையினர்களுக்கு மேலும் பலம் சேர்க்கின்ற வகையிலேயே தமிழ்க் கட்சிகள் பல ஒன்றிணைந்துள்ளன” என, நாடாளுமன்ற உறுப்பினர் சந்தி சிறீஸ்கந்தராஜா தெரிவித்தார்.

விசுவமடு பகுதியில், நேற்று (13) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதெ, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், படித்த புத்திஜீவிகள் என்று கூறிக்கொள்ளும் சிலர், எந்த கொள்கையும் கோட்பாடுகளும் இல்லாமல், யாழில் ஒன்றாக கூடி, தங்கள் இருப்பை இல்லாமல் செய்வதற்குக் கங்கணங்கட்டிக் கொண்டிருக்கின்றார்கயெனச் சாடினார்.

யாழ்ப்பாணம் என்ற சுற்றுவட்டத்துக்குள் ஒரு கட்சியை அமைத்து, அதனூடாகத் தமிழர்களுக்கு என்ன விடிவை ஏற்படுத்தி கொடுக்கப்போகின்றார்களெனவும், அவர் கேள்வியெழுப்பினார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தமிழர்கள் பலம் பெறவேண்டுமெனத் தெரிவித்த சாந்தி சிறீகாந்தராஜா எம்.பி, அப்பொழுதுதான் நாடாளுமன்றத்தில் பலம்பெயறகூடியதாக இருக்குமெனவும் கூறினார்.

அதனை மாற்றுகின்ற வகையிலும் பெரும்பான்மையினரை பலப்படுத்துகின்ற வகையிலுமே, புதிது புதிதாக மழைக்கு முளைக்கின்ற காளான்கள் போல பல கட்சிகளும் கூட்டணிகளும் உருவாகின்றனவெனவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .