2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

18 ஆண்டுகளின் பின் முகமாலை தேவாலய திருவிழா

Editorial   / 2017 செப்டெம்பர் 13 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.என் நிபோஜன், நடராசா கிருஸ்ணகுமார்

முகமாலை புனித ஆரோக்கிய மாதா ஆலையத்தின் வருடாந்த திருவிழா, 18 ஆண்டுகளின் பின்னர் நாளை மறுதினம் (15) ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது.

 

நாளை மாலை 4.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நவநாள் வழிபாட்டுடன் திருப்பலி நடைபெற்று, ஞாயிற்றுக்கிழமை (17) காலை 06.30 மணிக்கு திருநாள் திருப்பலி நடைபெற்று அன்னையின் ஆசீர்வாதம் இடம்பெறவுள்ளது.

முகமாலை, கடந்த காலத்தில் கடும் யுத்தம் இடம்பெற்ற பிரதேசமாக காணப்பட்டது.  யுத்த காலத்தில், யுத்த முன்னரங்க பகுதியாக, சூனியப் பிரதேசமாக இருந்த முகமாலையில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து இன்னமும் முழுமையாக மீள்குடியேற்றம் இடம்பெறாத பிரதேசமாகவும் முகமாலை காணப்படுகிறது.

குறித்த பிரதேசத்தில் அதிகளவு ஆபத்தான வெடிபொருட்கள் காணப்படுவதோடு, தற்போது கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்கள் நெருக்கடிகளுக்கு மத்தியில் பணியில் ஈடுப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .