2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வரலாற்றில் இன்று: மார்ச் 09

Menaka Mookandi   / 2016 மார்ச் 08 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1796: நெப்போலியன் தனது முதல் மனைவி ஜோஸப்பினை திருமணம் செய்தார்.

1862: மெக்ஸிகோ - அமெரிக்க யுத்தத்தின்போது அமெரிக்க வரலாற்றில் முதல் தடவையாக பாரிய தரை – கடல் ஈரூடக தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது.

1944: எத்தியோப்பியாவுடனான அடோவா சமரில் இத்தாலி தோல்வியுற்றதையடுத்து இத்தாலிய பிரதமர் பிரான்செஸ்கோ கிறிஸ்பி ராஜினாமா செய்தார்.

1944: சோவியத் விமானப்படையினர் எஸ்டோனியாவில் டல்லின் நகரில் பாரிய குண்டுவீச்சுகளை நடத்தியதால் பொதுமக்கள் உட்பட சுமார் 800 பேர் பலி.

1957: அமெரிக்காவின் அலாஸ்காவில் 8.3 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டதால் உருவான சுனாமியினால் ஹவாய் உட்பட பல இடங்களில் பாரிய சேதம் ஏற்பட்டது.

1959: நியூயோர்க்கில் நடைபெற்ற அமெரிக்க சர்வதேச விளையாட்டுப்பொருள் கண்காட்சியில்  பார்பி பொம்மை அறிமுகப்படுத்தப்பட்டது.

1967: அமெரிக்காவில் இரு விமானங்கள் மோதிக்கொண்டதால் 26 பேர் பலி.

1976: இத்தாலியில் இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் 42 பேர் பலி.

1986: சலேஞ்சர் விண்ணோடத்தின் அழிந்த சிதைவுகளை ஐக்கிய அமெரிக்காவின் ஆழ்கடலோடிகள் கண்டுபிடித்தனர். இறந்த ஏழு விண்வெளி வீரர்களினதும் உடல்கள் உள்ளே இருந்தன.

2006: சனிக் கிரகத்தின் துணைக்கோளான என்செலாடசில் திரவ நிலையில் நீர் கண்டுபிடிக்கப்பட்டது.

2010: அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில்  முதலாவது ஒரு பாலினத் திருமணம் நடைபெற்றது.

2011: டிஸ்கவரி விண்வெளி ஓடம் தனது கடைசி பயணத்தின்பின் பூமியில் தரையிறங்கியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .