2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இந்தவார பலன்கள் (09.10.2011 - 15.10.2011)

A.P.Mathan   / 2011 ஒக்டோபர் 08 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தவார பலன்கள் (09.10.2011 - 15.10.2011)

அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

தன்னை சார்ந்தவர்களுடன் ஒழிவு மறைவின்றி பழகும் வெண்மையான உள்ளம் கொண்ட மேட ராசி அன்பாகளே..!

இந்தவாரம் உங்களுக்கு பெண்களின் உதவியுடன் அன்றாட பணிகளை சுறுசுறுப்பாக செயல்படுத்தலாம். தொழில் தொடர்பான வேலைத் திட்டங்களுக்கு தூர பயணங்கள் செல்ல நேரிடும். குடும்பத்தில் உற்றார் உறவினர்களின் நல்லுறவு மகிழ்ச்சியை தரும், மேலும் புதிய ஆடை அணிகலன்கள் பரிசாக கிடைக்கக்கூடும். ஆச்சரியமான பொருள் காணக்கிடைத்தல். தேவையற்ற பிரச்சினைகளினால் மனபயங்கள் ஏற்படும். திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, கவனம் தேவை. பகைவர்களுடன் அதிக வாய்வார்த்தை மனகசப்பை ஏற்படுத்தும். நண்பர்களுடன் பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடலாம், இக்காலகட்டங்களில் மனதில் தீய சிந்தனைகள் இன்றி நம்பிக்கையுடன் வாழ்வதால் துயரங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தமது வாக்கு சாதுர்யத்தாலும் இனிய சுபாவத்தினாலும் வாழ்வில் வெற்றியை பெற்றுக் கொள்ளும் இடப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் நீங்கள் புதிய காரியங்களை தொடங்கும்போது நிதானமாக சிந்தித்து செயல்படவும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன் சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளலாம். சுவையான உணவுகளை உண்ணலாம். வியாபாரத்தில் நவீன தொடர்புகள் தேடிவர கூடும். வெளிதேசங்களிலிருந்து வரும் செய்திகள் மனஅமைதி தரும். கேட்பார் பேச்சை கேட்டு தேவையற்ற பிரச்சினைகளில் முன்னிற்பதை தவிர்க்கவும். பெண்களின் உதவிகள் கிடைக்க கூடும். நெருங்கிய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மேல் அதிகாரிகளின் அனுசரணையுடன் நல்ல வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளலாம். இக்காலகட்டங்களில் நமது நன்மையை கருதும் பெரியார்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா




மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

வலிமையான உள்ளமும் செயல்களில் சுறுசுறுப்பும் கொண்ட மிதுனம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு மனதில் உற்சாகமும் மகிழ்ச்சியும் காணப்படும். நல்லுறக்கம் நலனை பாதுகாக்கும். அஜீரண கோளாறுகளினால் சாப்பாட்டில் வேண்டாத வெறுப்பு தன்மை ஏற்படும். வெண்மையான ஆடைகளை அணியலாம். அரசாங்க ஊழியர்களின் உதவியுடன் புதிய வேலை முயற்சிகளை முன்னெடுக்கலாம். பணத் தேவைகளின் போது பிறரின் உதவியை நாடும் நிலை ஏற்படக்கூடும். சேமிப்புக்களில் அதிக ஊக்கம் தேவை. குடும்பத்தில் உறவினர்கள் மூலம் வரும் செய்திகள் சுபகாரியங்களை ஏற்படுத்தும். வியாபார உத்தியோகத்தர்கள் தமது கடின உழைப்பினால் அதிக லாபம் அடைவார்கள். மனதளவில் சிறு அலைச்சல்கள் ஏற்படக்கூடும். இக்காலகட்டங்களில் தன்னலமின்றி பிறர் நலன் கருதுவதால் மனநிறைவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 10
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு இஒரேஞ்
அதிஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)




புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

மென்மையான சுபாவமும் எல்லோருடனும் எளிமையாக பழகும் தாழ்ந்த உள்ளமும் கொண்ட கடக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் நீண்ட நாள் தடைப்பட்டிருந்த காரியங்களை எளிதாக செய்து முடிப்பீர்கள். கூட்டு தொழிலை விரிவுபடுத்த அதிக அலைச்சல்களையும் போட்டிகளையும் எதிர்நோக்க நேரிடும். பகைவர்களினால் சிறு துன்பங்கள் தோல்விகள் ஏற்படக்கூடும், பொறுமையுடன் இருப்பது நன்று. குடும்பத்தில் சகோதர சகோதரிகள் ஒருவருக்கொருவர் அன்யோன்யமாக காணப்படுவார்கள். ஒவ்வாத உணவினால் உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். நலனில் அதிக கவனம் தேவை. பெண்களுடன் கோபத்தில் பேசும் வார்த்தைகள் மனகஷ்டத்தை ஏற்படுத்தும். வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். இக்காலகட்டங்களில் தேவையற்ற பிரச்சினைகளை சிந்தித்து கவலைகொள்ளாது மகிழ்ச்சியுடன் வாழவும்.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா




மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

யாருக்காகவும் தனது கொள்கைகளை விட்டுக்கொடுக்காது பயமற்ற பேச்சும் செயலும் கொண்ட  சிம்மம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் நீங்கள் பொழுதுபோக்குகளுக்காக இசையில் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். பணவிடயங்கள் எதிர்பார்த்தபடி அமையாது. காணாமல்போன பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. திருடர்களின் நடமாட்டம் மனபதற்றத்தை ஏற்படுத்தக்கூடும். வியாபாரத்தில் மேல் அதிகாரிகளின் நல்லுறவு புதிய வாய்ப்புக்களுக்கு வழிவகுக்கும். வேலை அல்லது இடமாற்றங்களுக்கு வழியுண்டு. குடும்பத்தில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறக்கூடும். நாவுக்கு சுவையான உணவுகளை உண்ணலாம். சிக்கனமற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. துஷ்டர்களின் நட்பிலிருந்து விலகி நிற்கவும். இக்காலகட்டங்களில் ஆன்மீக யாத்திரைகள் பயணங்கள் செல்வதன் மூலம் மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிட்டும்.

அதிர்ஷ்ட திகதி: 13
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி


சந்திராஷ்டமம்
ஒக்டோபர் 10ஆம் திகதி காலை 06.12 மணியிலிருந்து ஒக்டோபர் 12ஆம் திகதி மாலை 06.42 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.




உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

நீதி தவறாமை, கண்ணியம், நேர்மை, கனிவான உள்ளம், சுபாவத்தில் கலகலப்பான கன்னி ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு புதிய வேலைத் திட்டங்களை செயல்படுத்த அதிக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அழகிய ஆடை, அணிகலன்கள் பரிசாக கிடைக்க கூடும். குடும்பத்தில் பெரியார்களின் உதவியுடன் நல்ல காரியங்களை முன்னின்று செயல்படுவீர்கள். நண்பர்களின் மூலம் புதிய செய்திகள் வந்து சேரும். விசித்திரமான ஆச்சரியமான பொருள் காணக்கிடைத்தல். இனிமையான உணவுகளை உண்ணலாம். தொழில் ஸ்தானத்தில் சிறப்பான முன்னேற்றமும் லாபமும் காணப்படும். தேவையற்ற பிரச்சினைகள் தேடி வந்தாலும் அதிலிருந்து விலகி நிற்பது நல்லது, தவிர்த்துக்கொள்ளலாம். இக்காலகட்டங்களில் பெண்களுடன் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மனசங்கடங்களை தவிர்த்துக்கொள்ளலாம்.

அதிர்ஷ்ட திகதி: 15
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்


சந்திராஷ்டமம்
ஒக்டோபர் 12ஆம் திகதி மாலை 06.45 மணியிலிருந்து ஒக்டோபர் 15ஆம் திகதி காலை 07.28 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

தேடிச் சென்று உதவிடும் குணமும் முடிவுகளை பாராது முன்னேற்றத்திற்காக முழு மூச்சாக செயல்படும் துலா ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு நண்பர்களுடன் ஒன்றிணைந்து புதிய வியாபார முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். நல்ல வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள அரசாங்க ஊழியர்களின் உதவியை நாடவேண்டிய நிலை ஏற்படக்கூடும், இதனால் சிறு அலைச்சல்கள் ஏற்படும். உற்சாகத்துடன் அன்றாட பணிகளை செய்து முடிக்கலாம். இன்பமான உறக்கம் இனிதே கிடைக்கும். வரவுக்கேற்ற செலவுகளை கடைப் பிடிக்கவும். செயல்களில் பதற்றநிலை காணப்படும். பொறுமையுடன் நடக்கவும். பிறரின் பிரச்சினைகளை முன்னிட்டு பேசுவதை தவிர்க்கவும், இல்லாவிடின் அது பகை ஏற்படுத்தக்கூடும். இக்காலகட்டங்களில் குடும்பத்தாருடன் குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவதால் வாழ்க்கையில் தொல்லைகள் அகன்று மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடையவர்களே, எடுத்த காரியத்தை முடிக்கக்கூடிய ஆற்றல் பெற்ற விருட்சிக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு புதிய காரியங்கள் சற்று அலைச்சலை ஏற்படுத்தக் கூடும். குடும்பத்தில் நெருங்கிய சொந்தங்களின் வருகை குதூகலத்தை ஏற்படுத்தும். பெண்கள் தமது பணிகளை பொறுப்புடன் செய்வார்கள். அனாவசிய ஆடம்பர செலவுகளினால் பணத் தட்டுப்பாடுகள் ஏற்படும். பணம் சம்பாதிப்பதில் கடின உழைப்பு தேவை. அரசாங்க அதிகாரிகளின் உதவியுடன் புதிய தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வீர்கள். தூய்மையான ஆடைகளை அணியலாம். பெரியார்களின் அன்பும் ஆதரவும் மனஆறுதலை தரும். உண்ணும் உணவில் விருப்பமின்மை, இதனால் உடல் சோர்வடையும். ஆரோக்கியத்தை பாதுகாக்கவும். இக்காலகட்டங்களில் உடலுக்கும் உள்ளத்துக்கு எந்த சிரமங்களையும் கொடுக்காது சுறுசுறுப்பாக செயல்படவும்.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: (நவகிரகம்)




மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அனைவரிடமும் அன்பு காட்டும் உள்ளமும் தீமைகளை கண்டு விலகி செல்லும் பக்குவமும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு நீங்கள் தொடங்கும் புதிய பணிகளை அக்கறையுடன் செய்வதனால் நற்பலனை அடையலாம். குடும்பத்தில் நெருங்கிய சொந்தங்களின் ஒன்றுகூடல் மனதுக்கு மகிழ்ச்சி தரும். நண்பர்களுடன் சேர்ந்து வெளிதேச பயணங்களை மேற்கொள்ளல். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும். வியாபாரத்தில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்கக்கூடும். ஆரோக்கியமான ஆகாரம் கிடைக்கும். இசை துறையில் ஆர்வம் அதிகரிக்கும். பொழுதுபோக்குகளுக்கு அதிக செலவுகள் செய்யநேரிடும். மனதில் பயங்கள் சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும், இக்காலகட்டங்களில் நமக்கு நன்மைகளை செய்யும் இறைவனை இடைவிடாது வழிபடுவது அவசியம்.

அதிர்ஷ்ட திகதி: 13
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதில் இறைவனுக்கு முதலிடம் அளிக்கும் மகர ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு குடும்ப உறவினர்களின் மூலம் எதிர்பாராத செய்திகள் வந்து சேரும். பெண்களுடன் அதிகம் பேசும்போது வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். நல்ல நண்பர்களின் நட்பு மீண்டு ஒன்றுபடக்கூடும். பொன்பொருள் சேர்க்கை. வியாபாரத்தில் நவீன முயற்சிகள் அதிக நஷ்டத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு. புதிய திட்டங்களில் சிறு தோல்விகள் தடைகள் ஏற்படக்கூடும். தேவையற்ற பிரச்சினைகள் அலைச்சலை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியம் சீரற்று காணப்படும், ஒவ்வாத உணவுகளை தவிர்த்து நலனில் அக்கறை செலுத்தவும். அயராத உழைப்பினால் நிறைவான ஆதாயத்தை பெற்றுக்கொள்ளலாம். இக்காலகட்டங்களில் சிந்தனையற்ற செயல்கள் நம்மை தவறவிடுவதோடு அதிலிருந்து மீண்டு வர முயற்சிக்க வேண்டும்.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா




அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எதற்கும் தளராத நெஞ்சமும் ஆடம்பரம் இன்றி வாழ விரும்பும் வக்குவான்மை கொண்ட கும்ப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு தீயவர்களின் சிறு சிக்கல்கள் தோல்விகள் மனதளர்வை ஏற்படுத்த கூடும். பிறரின் பிரச்சினைகளை வாதிடுவதனால் மனஸ்தாபத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் உதவியுடன் புதிய வேலைத்திட்டங்களை மேற்கொள்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவதால் மனகுழப்பங்கள் நீங்கும். வரவு குறைந்து செலவுகள் அதிகரிக்கக்கூடும். நண்பர்களுடன் பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடலாம். நிம்மதியான தூக்கம் நிறைவாக கிடைக்கும். தொலைதூர செய்திகள் மனதுக்கு அமைதியும் உற்சாகத்தையும் தரகூடும். இக்காலகட்டங்களில் கடின உழைப்பே உயர்வு தரும், ஆகவே ஒவ்வொரு காரியத்தையும் விடா முயற்ச்சியுடன் செய்வது நன்று.

அதிர்ஷ்ட திகதி: 13
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9- பாதங்கள்.

தனக்கென்று மட்டும் எண்ணாது பிறரின் நலனுக்காக செயல்படும் பரந்த உள்ளம் கொண்ட மீனம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு ஆலய அனுஷ்டானங்களின் போது வெண்மையான ஆடைகளை அணியலாம். மேல் உத்தியோகத்தர்களினால் சில இடையூறுகள் ஏற்படக்கூடும். நாவடக்கம் அவசியம். சேமிப்பை விட செலவுகள் சற்று அதிகரிக்கும். காணாமல்போன பொருள் மீண்டும் கிடைக்கக் கூடும். பெண்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். பொருள் திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, கவனம் தேவை. அறுசுவையான உணவுகளை உண்ணலாம். புதிய தொழில் முயற்சிகள் அல்லது அனாவசிய பிரச்சினைகளில் ஈடுபடுவதை கண்டிப்பாக தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் தமது சாதனைகளின் மூலம் வெற்றி அடைவார்கள். இக்காலகட்டங்களில் தெய்வீக சிந்தனைகளில் நாட்டம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 13
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .