2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இந்தவார பலன்கள் (31.10.2010 – 06.11.2010)

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 30 , பி.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தவார பலன்கள் (31.10.2010 – 06.11.2010)
 

அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

எல்லாம் தெரிந்தாலும் அடக்கமாக இருக்கும் நீங்கள் பிறரின் பொருளுக்கு ஆசைப்படாத மேட ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு நிதானமாக சிந்தித்து செயல் ஆற்றினால் சிறப்பான வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் உறவினர்களினால் சுபவிசேஷங்கள் நடைபெறும். பெண்களுடன் வேண்டாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்க ஊழியர்களினால் நன்மை கிடைக்க கூடும். நண்பர்கள் ஒன்றிணைந்து ஒத்துழைப்புடன் செயல்பட வாய்ப்புண்டு. பணவரவுகள் இருந்தாலும் அதிக செலவுகளை மேற்கொள்வீர்கள். வியாபார வளர்ச்சியில் சில தடுமாற்றங்கள் ஏற்பட்டு நீங்கும், நிதானத்துடன் செயல்படவும். உடலுக்கு ஒவ்வாத உணவினால் உடல் உபாதைகள் ஏற்படும், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளவும். இக்காலகட்டங்களில் இறைவனை மனநிறைவுடன் தரிசிப்பதால் துன்பங்கள் விலகி நன்மை கிடைக்கும்.  

அதிர்ஷ்ட திகதி: 31
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், நீலம்   
வழிபாடு: நவகிரகம்


 

கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தமது வாக்கு சாதுர்யத்தாலும் இனிய சுபாவத்தினாலும் சாதனங்களை பெற்றுக் கொள்ளும் இடப ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு வியாபார நிலையில் உயர் அதிகாரிகளையும் உடன் ஊழியர்களையும் அனுசரித்து போவதன் மூலம் நன்மைகளை பெறுவீர்கள். குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகையினால் குதூகலம் ஏற்படும். வெளிதேசங்களிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்க கூடும். பணவரவுகள் சாதகமாக அமையாது. பணம் சம்பாதிப்பதில் அதிக ஆர்வம் காட்டவும். பெண்களின் சிறு உதவியும் சிறப்பாக காணப்படும். சில உடல் உபாதைகள் ஏற்பட்டு மறையும், தேக சுகத்தில் கவனம் தேவை. பகைவர்களுடன் வேண்டாத பிரச்சினைகளை தவிர்க்கவும். புதிய காரியங்களை தொடங்குவதற்கு நண்பர்களின் உதவிகள் கிடைக்க வாய்ப்புண்டு. இக்காலகட்டங்களில் பெரிய மனிதர்களின் அன்பும் பாசமும் நம்பிக்கையை தரும்.    

அதிர்ஷ்ட திகதி: 02
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி


 

மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9-பாதங்கள்.

தீவிரமோ, தொய்வோ இல்லாத மிதமான போக்குடையவர்கள், மென்மையான குணம் படைத்த மிதுன ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு குடும்பத்தில் உறவினர்கள், நண்பர்களுடன் சுற்றுலா பயணங்கள் செல்ல வாய்ப்பு கிடைக்கும், இதனால் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் ஏற்படக்கூடும். பெண்களின் உதவிகள் கிடைக்கும். நிதானமாக செயல்படுத்தும் திட்டங்களில் முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் பிரச்சினைகளிருந்து விலகி நிற்பது நல்லது. சேமிப்பை விட செலவுகள் அதிகரிக்க கூடும். ஆரோக்கியமான உணவுகள் கிடைக்கும், சில மனசோர்வுகள் ஏற்பட்டு மறையும். தொழிலில் சில இடமாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. விநோத விளையாட்டுகளில் ஈடுபடும்போது அவதானத்துடன் இருப்பது நல்லது. உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பது கடினம். இக்காலகட்டங்களில் சாதுக்களின் தரிசனங்கள் கிடைக்க வாய்ப்புண்டு.

அதிர்ஷ்ட திகதி: 02
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் பச்சை   
வழிபாடு: சிவன் (சந்திரன்)


 

புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

பிடிவாதமான குணமும் வாக்கு சாதூர்யமும், தைரியமும் அனைவரிடம் அன்பு கொண்ட கடகராசி  அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு தூய ஆடைகள் அணிந்து சுபகாரியங்களில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கும். குடும்பத்தில் உற்றார், உறவினர்களின் வருகை சிறப்பாக காணப்படும். மேலும் பெண்களின் உபசரிப்புக்கள் அதிகரிக்க கூடும். பொழுது போக்குகளுக்காக பிரயாணங்கள் செல்ல வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் தடங்கள் நீங்கி புதிய தொடர்புகள் தேடிவரக்கூடும். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேர வாய்ப்புண்டு. புண்ணிய தலங்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதன் மூலம் மனசஞ்சலங்கள் விலகி அமைதி கிடைக்கும். புதிய வேலைத் திட்டங்களை கையாழ்வதற்கு அரசாங்க உதவிகள் கிடைக்ககூடும். நண்பர்களுக்கிடையே நல்ல அன்யோன்யம் ஏற்படும், இந்நாட்களில் பிரச்சினைகள் முடிவுபெற்று புதிய பாதை கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 02
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு    
வழிபாடு: பார்வதி



 

மகம், பூரம்;, உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

தப்பு செய்தவர்களை தட்டிக்கேட்கும் நீங்கள் உறவினர்களைவிட நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிம்ம ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு புதிய முயற்சிகளை உடனுக்குடன் முடிக்கும் சந்தர்ப்பம் அமையும், இதனால் பணவரவு அதிகரிக்கும். வியாபார வளர்சியில் சில அதிகாரிகளின் போட்டிகள் ஏற்பட கூடும், பொறுமையுடன் செயல்படவும். குடும்பத்தில் பெண்களுடன் வேண்டதா வாக்குவாதங்களுக்கு இடமுண்டு, நாவடக்கம் அவசியம். அஜீரண உணவினால் உடல் ஆரோக்கியம் பாதிப்படையும், ஆரோக்கியத்தில் முக்கிய கவனம் செலுத்தவும். அறிமுகமற்ற நட்புக்களின் உதவியை நாடுவதன் மூலம் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. நன்மை பயக்கும் செயல்கள் செய்ய சந்தர்ப்பம் கிடைக்கும். சகோதர உறவுகளுக்கிடையே நல்ல அன்யோன்யம் ஏற்படுவதுடன் மகிழ்ச்சியும் ஏற்படும். இக்காலகட்டத்தில் பெரியோர்களின்; ஆலோசனைகள் வாழ்வில் புதிய வழியை காட்டும்.

அதிர்ஷ்ட திகதி: 02
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் பச்சை   
வழிபாடு: சிவன் (சந்திரன்)




உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

நீதி தவறாமை கண்ணியம், நேர்மை, கனிவான உள்ளம், சுபாவத்தில் கலகலப்பான கன்னி ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு புதிதாக தொடங்கும் வியாபாரத்தில் வெற்றியும் அதிக லாபத்தையும் பெற்றுக்கொள்வீர்கள். உயர் ஊழியர்களை அனுசரித்து நடப்பது நல்லது. குடும்பத்தில் சுபவிசேஷங்களுக்காக அதிக செலவுகளை மேற்கொள்ளுதல். பெண்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி ஏற்படும். நவீன வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரச உதவிகள் தேடிவரக்கூடும். அழகிய ஆடை - அணிகலன்கள் பரிசாக கிடைக்க வாய்ப்புண்டு. நீண்ட தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து சேரும். நண்பர்களுடன் பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது கவனம் தேவை. இந்நாட்களில் இறைவன் திருவருளால் சாதுக்களை தரிசித்து ஆசிபெற சந்தர்ப்பம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 05
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்   
வழிபாடு: பிரம்மா




சித்திரை 3, 4 சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

துயரங்கள் துரத்தினாலும் வெளிக்காட்டாமல் புன்னகையுடன் உற்சாகமாக பேசும் துலா ராசி அன்பர்களே..!

இந்த வாரம் இசையில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள், இதனால் மனசோர்வுகள் நீங்கும். புதிய முயற்சிகளில் சிறப்பான ஏற்றமும் உயர்வும் காணப்படும். நண்பர்களுடன் வெளிபிரயாணங்கள் செல்லுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும், இதனால் அதிர்ஷ்டம் ஏற்படக்கூடும். பிறரின் பிரச்சினைகளினால் உள்ளத்தில் சிறு சங்கடங்கள் ஏற்படும். குடும்ப உறவினர்களினால் சுபகருமங்கள் நடைபெற வாய்ப்புண்டு. விசேடமாக பெண்களினால் அறுசுவை உணவு உபசரிப்புக்கள் கிடைக்கக்கூடும். தொழிலை மேம்படுத்த அதிக அலைச்சல்களை மேற்கொள்ள வேண்டிருக்கும். இந்நாட்களை நன்னாளாக நினைத்து நன்மையானதை மட்டும் சிந்தித்து செயல்படுவதனால் நல்வழி கிடைக்கும்.   

அதிர்ஷ்ட திகதி: 05
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்   
வழிபாடு: பிரம்மா



விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

கால ஓட்டத்தை உணர்ந்து அதற்கேற்ப காய்களை நகர்த்தும் வல்லமை கொண்ட எளிமையை விரும்பும் விருச்சிக ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு அழகிய ஆடை - அணிகலன்கள் பரிசாக கிடைக்கக்கூடும். நிம்மதியான உறக்கம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புக்கள் தேடிவர வாய்ப்புண்டு இதனால் பணவரவுகள் அதிகரிக்கும். புதிய வேலைகள் உங்கள் திறமைக்கு ஏற்ப அமையும். நண்பர்களின் ஒத்துழைப்புடன் செயல்படுவதால் சோதனையை சாதகமாக மாற்றலாம். எந்த சூழ்நிலையிலும் பிறர் உதவி நாடுவதை தவிர்க்கவும். நீண்ட நாட்களின் பின் மகிழ்ச்சியான செய்திகளை கேள்விப்படுவீர்கள். குடும்பத்தில் சொந்த பந்தங்களினால் குதூகலம் ஏற்படும். ஒவ்வாத உணவினால் உஷ்ண சம்பதமான உபாதைகள் ஏற்பட வாய்ப்புண்டு, ஆரோக்கியமான ஆகாரம் உட்கொள்ளவும். நீண்ட நாள் உங்களை வருத்திய பிரச்சினைகள் நீங்கி வாழ்வில் சிறப்பான உற்சாகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 06
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு   
வழிபாடு: பார்வதி


 

மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

வைராக்கியம், திடசிந்தனை, நேர்மை, நல்லொழுக்கம் உடைய தனுசு ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு வியாபாரத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்து செயல்படுவது நல்லது. அவ்வப்போது ஏற்படும் உடல் உபாதைகளினால் மருத்துவ செலவுகள் அதிகரிக்க கூடும், தேகசுகத்தை பாதுகாக்கவும். தொலைந்த பொருள் கிடைக்க வாய்ப்புண்டு. குடும்பத்தாருடன் புண்ணிய தலங்கள் சென்று பூஜைகள் செய்வதற்கு சந்தர்ப்பம் அமையும். புதுமையான பொருட்களை காண கிடைத்தல். எதிர்பார்த்த பணவரவுகள் உரிய நேரத்தில் வந்து சேரும். புதிய வேலை திட்டங்களை நடைமுறைபடுத்த நெருங்கி நட்புக்களின் உதவிகள் கிடைக்க கூடும். தூய ஆடைகளை அணிவீர்கள். அறுசுவையான உணவுகள் கிடைக்கும், பகைவர்களின் பிரச்சினைகளிருந்து விலகி நிற்பது நல்லது. இக்காலகட்டத்தில் பிரார்த்தனைகள் மனஆறுதலை பெற்று தரும்.

அதிர்ஷ்ட திகதி: 05
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்   
வழிபாடு: பிரம்மா


 


உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தெய்வீக பலன் பெற்றவர்களே! நினைத்ததை சாதிக்கும் வல்லமை படைத்த மகர ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு புதிய நண்பர்களின் நட்புக்கள் கிடைக்க கூடும். அழகிய ஆடை - அணிகலன்களை பரிசாக பெறுவீர்கள். விநோத விளையாட்டுகளில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும். தொழில் ரீதியாக சில இடமாற்றங்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தாருடன் சுற்றுலா பயணங்களில் ஈடுபடுவதன் மூலம் அனுகூலம். கேட்பார் பேச்சுகளை பொருட்படுத்தாமல் சுயசிந்தனையுடன் செயல்படவும். பணவரவுகளில் தாமதம் ஏற்படும், இதனால் பிறர் சலுகை எதிர்பார்ப்பதை தவிர்க்கவும். அதிகாரிகளின் போட்டிகள் பகையை ஏற்படுத்த கூடும், சிந்தித்து செயல்படவும். பெரிய மனிதர்களின் முன்மாதிரிகள் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும். இக்காலகட்டங்களில் சொல்லிலும் செயலிலும் பொறுமை காப்பது நன்று.

அதிர்ஷ்ட திகதி: 02
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி

சந்திராஷ்டமம்
ஒக்டோபர் 31ஆம் திகதி மாலை 11.04 மணியிலிருந்து நவம்பர் 02ஆம் திகதி காலை 12.49 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

 

அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

ஆடம்பரம் இன்றி நடப்பவர்களே, புத்திரர்களால் அதிக அளவில் அதிர்ஷ்டம், செல்வாக்கு பெற்ற கும்ப ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு மனதளவில் சில அலைச்சல்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் பெண்களின் உபசரிப்புக்கள் அதிகரிக்கும், இதனால் மகிழ்ச்சி ஏற்படும். உறவினர்களுடன் பிரயாணங்கள் செல்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும். வியாபாரத்தில் உயர் உத்தியோகத்தருடன் சுமுகமான உறவை வைத்து கொள்வது நல்லது. தீய நண்பர்களினால் வேண்டாத வாக்குவாதங்களுக்கு இடமுண்டு, வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். நினைத்த காரியங்களை சாதித்து வெற்றியடைய வாய்ப்புண்டு. பொழுதுபோக்குகளுக்காக அதிக செலவுகளை மேற்கொள்வீர்கள். உடலில் சில உபாதைகள் ஏற்பட்டு மறையும், ஆரோக்கியமான உணவுகளை உண்ணவும். இக்காலகட்டங்களில் மனதில் நம்பிக்கையுடன் இறைவனை வணங்குவதால் எல்ல கவலைக்கும் நன்மையான வழி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 31
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், நீலம்   
வழிபாடு: நவகிரகம்

சந்திராஷ்டமம்
ஒக்டோபர் 02ஆம் திகதி காலை 12.49 மணியிலிருந்து நவம்பர் 04ஆம் திகதி காலை 01.44 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

 

பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி; முடிய ஆக 9-பாதங்கள்.

காரியத்தில் மனத்தெளிவு உள்ளவர்கள், யாரிடமும் மனம்விட்டுப் பழக விருப்பமில்லாத மீன ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு குடும்பத்தில் சங்கடங்கள் மறைந்து உறவினர்களினால் குதூகலம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். திடீர் அதிர்ஷ்டம் மூலம் சொத்துக்கள் சேரும். நட்பு வட்டம் விரிவடையும், இதனால் மனதில் உற்சாகம் ஏற்படக்கூடும். புதிய வேலைகளை தொடங்குவதற்கு அரசாங்க ஊழியர்களினால் உதவிகள் கிடைக்க வாய்ப்புண்டு. தூய ஆடைகளை அணிவீர்கள். விநோத விளையாட்டுகளில் ஈடுபடும்போது அதிக அக்கறை செலுத்தவும். சேமிப்பு குறைந்து செலவுகள் அதிகரிக்க கூடும். பணம் சம்பாதிப்பதில் ஊக்கம் செலுத்தவும். எதிரிகளின் செயல்கள் பகையை எற்படுத்தக் கூடும். பொறுமையுடன் செயல்படவும். சில மனசஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். இந்நாட்களில் பிரார்த்தனைகளில் ஈடுபடுவதன் மூலம் மன ஒருநிலைபடும்.

அதிர்ஷ்ட திகதி: 01
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
வழிபாடு: சிவன் (சூரியன்)

சந்திராஷ்டமம்
ஒக்டோபர் 04ஆம் திகதி காலை 01.44 மணியிலிருந்து நவம்பர் 06ஆம் திகதி காலை 03.31 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .