2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘அழுக்குக்கு அழகு பிடிப்பதில்லை’

Editorial   / 2017 ஜூலை 20 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனோரம்மியமான மாலை வேளை! சில்லென்ற இளம்காற்று வரவேற்க, கலகலப்புடன் மழலைகளும் அவர்களுடன் புதுப்பொலிவுடன் பூவையரும் வாலிபரும் பூ வனத்துக்குள் மெய்மறந்து உலாவருகின்றனர். முதியோரும் இளையவராகின்றனர்.  

வாசம் மிகுந்த மலர் பிரதேசம்; வட்டமிடும் புள் இனம்; குழந்தைகள் தளிர் நடைபயின்று அம்மாக்களுடன் ஓட்டப்பந்தயம். வானரங்கள் இதைக்கண்டு மரத்தின் கிளை விட்டிறங்கி இளித்து மகிழ்ந்தன.

மக்களோடு மக்களாய், இரு நண்பர்கள் வந்தனர். ஒருவன் மட்டும் அழுக்கான உடையில், பரட்டைத்தலையன். சற்றுக்கோபத்துடன் சொன்னான். “சே..ச்சே... இது என்ன இடம்.  சும்மா மாமிசக் கடையோரம் குடித்துச் சூது விளையாடியவனை இங்கே ஏன் கூட்டிவந்தாய்? என்ன கூச்சல் இங்கு? நேரம்போவதுதான் மிச்சம். இங்கிருக்கப் பிடிக்கவில்லை; போகிறேன்” என்று, போயே விட்டான்.

அழுக்குக்கு அழகு பிடிப்பதில்லை.

   வாழ்வியல் தரிசனம் 20/07/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .