2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சட்டத்தை மக்கள் மதிக்க வேண்டும்

Princiya Dixci   / 2016 ஜூலை 11 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்தப் பிரச்சினைகள் எவர்மூலம் வந்தாலும் நடு நிலையில் இருப்பவர்கள் பாகுபாடு பார்க்காமல் நல்ல தீர்ப்பையே வழங்குவார்கள். சட்டத்துறை சார்ந்தவர்கள் கற்ற சட்டத்தையும் சமூகநீதிகளையும் கூட இணைத்தே கடமையாற்ற வேண்டும். சட்டப்புத்தகத்தில் இல்லாத சங்கதிகள் உலக நீதியில் மக்களோடு மக்களாக இணைந்தே வந்துள்ளது.

எமது பழைமையான இதிகாச புராணங்கள் மற்றும் ஏனைய சமூக நூல்கள் வாயிலான ஒழுக்கத்தைப் போதிக்கும் நூல்களை எல்லோருமே கட்டாயமாக அறிந்து கொள்ள வேண்டும். ஒரு முகப்பார்வைக்குள் மட்டும் தீர்ப்பு வழங்கலாகாது. சமூகநீதி, யதார்த்த நிலைகளைச் சீர்தூக்கியே சட்டவாதிகள் செயற்பட்டால் அவை மக்களால் நன்கு வரவேற்றப்படும்.

மேலும், சட்டத்தை மக்கள் மதிக்க வேண்டும். ஓர் ஒழுங்கில் சமூகம் நடைபயில சட்டம் தேவைப்படுகின்றது. கல்லூரிகளில் சட்டம் கட்டாயமாக்கப்படல் வேண்டும்.

வாழ்வியல் தரிசனம் 11/07/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .