2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இருதயபுரம் அருள்மிகு ஸ்ரீ குமாரத்தன் ஆலய உற்சவம்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, இருதயபுரம் அருள்மிகு ஸ்ரீ குமாரத்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நேற்று வியாழக்கிழமை (20) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

மிகவும் பண்டைய கால ஆலயங்களுல் ஒன்றாக காணப்படும் இந்த முருகன் ஆலயம்தை முன்னர் வேடுவர்கள் வழிப்பட்டு

வந்ததாக கூறப்படுகிறது.
பத்து தினங்கள் நடைபெறவுள்ள ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் தினமும் ஸ்தம்ப பூஜை, வசந்த மண்டபப்பூஜை, சுவாமி உள்வீதியுலா, வெளிவீதியுலா என்பன நடைபெறவுள்ளது.

நேற்று காலை விநாயகர் வழிபாடுகளுடன் உற்சவம் ஆரம்பமானதுடன், விசேட ஹோமபூஜை, கும்ப பூஜை, அபிசேக ஆராதனைகளும் நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து கொடிச்சீலைக்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டு கொடிச்சீலை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றன.

வசந்த மண்டப பூஜையியைத் தொடர்ந்து தம்பத்துக்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டு கொடியேற்றம் நாத, வேத கீதங்களுடன் அடியார்களின் ஆரோகரா கோசத்துடன் கொடியேற்றம் நிகழ்த்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தம்பத்துக்கு விசேட அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகளும் நடாத்தப்பட்டன.

எதிர்வரும் 28ஆம் திகதி ஆலயத்தின் தேர்த் திருவிழா நடைபெறவுள்ளதுடன், 29ஆம் திகதி மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தக்கேணியில் தீமர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .