2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மனிதாபிமானம்...

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 15 , பி.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்   

கண்டி, பொக்காவலை பஸ் தரிப்பிடத்தில், சுமார் 46 வருடங்களுக்கு மேல் தனியாக வாழ்ந்து வந்த லொக்கு பண்டா (69) என்ற வயோதிபர், உடல்நலக் குறைவால், திங்கட்கிழமை மாலை உயிரிழந்ததைத் தொடர்ந்து, பிரதேச மக்கள் இணைந்து, அவரது இறுதிக் கிரியைகளை மேற்கொண்டுள்ளனர்.   

உடஹிங்குல்வல பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி வயோதிபர், 1971ஆம் ஆண்டு, நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக, தனது வீட்டைவிட்டு வெளியேறியுள்ளதுடன், குறித்த பஸ் தரிப்பிடத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.   

இவர், பஸ் தரிப்பிடத்துக்கு வந்த நாள் முதல், இரவு-பகல் பொழுதுகளை பஸ் தரிப்பிடத்திலேயே, கழித்துள்ளார். இதையடுத்து, பிரதேசவாசிகள், மேற்படி வயோதிபருக்காக, பஸ் தரிப்பிடத்தில் ஓர் அறையைத் தயார்செய்து வழங்கியுள்ளனர். அந்த அறையில் கடந்த சில வருடங்களாக வாழ்ந்து வந்த அவர், திங்கட்கிழமை மாலை, உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.   

இதையடுத்து, இவரது உடல், பஸ்தரிப்பிடத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுப் பின்னர், நகரவாசிகளால் நல்லாடக்கம் செய்யப்பட்டது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .