2021 ஜனவரி 23, சனிக்கிழமை

'அதிகரிக்கப்பட்ட சம்பளக் கொடுப்பனவை வழங்கவும்'

Suganthini Ratnam   / 2016 ஜூலை 15 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் முகாமைத்துவ உதவியாளர்களுக்கு இதுவரையில் அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்ட சம்பளக் கொடுப்பனவை வழங்குவதற்கு மாகாண முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எம்.எஸ்.உதுமாலெப்பை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், 'நாட்டிலுள்ள மாகாண சபைகளின் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முகாமைத்துவ உதவியாளர்களுக்கு அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்ட சம்பள கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது.

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர், தவிசாளர், அமைச்சர்களின் முகாமைத்துவ உதவியாளர்களுக்கு மட்டும் அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்ட சம்பளக் கொடுப்பனவு வழங்கப்பட்டும், கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களின் முகாமைத்துவ உதவியாளர்களுக்கு இதுவரையும் அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்ட சம்பளக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் முகாமைத்துவ உதவியாளர்களுக்கு அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்ட சம்பளக் கொடுப்பனவு வழங்கப்படுவதற்கான அனுமதி கிழக்கு மாகாண ஆளுநரால் வழங்கப்பட்டுள்ளதாகவும் மிக விரைவில் மாகாண சபை உறுப்பினர்களின் முகாமைத்துவ உதவியாளர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக முதலமைச்சரினால் கடந்த ஜுன் மாதம் 21ஈம் திகதி நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டும் இதுவரை இச்சம்பள கொடுப்பனவு வழங்கப்படவில்லை.

உறுப்பினர்களின் முகாமைத்துவ உதவியாளர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பளம் கொடுப்பனவை வழங்குவதற்கு மிக விரைவில் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .