2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

அத்தாட்சிப்படுத்தப்படாத, கலப்பட விதைநெல் விற்பனையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை

Suganthini Ratnam   / 2016 மார்ச் 15 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அத்தாட்சிப்படுத்தப்படாத மற்றும் கலப்பட விதைநெல் விற்பனையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துஷித பி.வணிகசிங்க தெரிவித்தார்.

அக்கரைப்பற்று விதைநெல் உற்பத்தியாளர் சங்கத்தின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட ஒருதொகுதி விதைநெல் வெளியீட்டு விழா, அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் திங்கட்கிழமை (14) நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'அம்பாறை மாவட்டத்தில் சிறந்த விதை நெல்லை உற்பத்தி செய்கின்ற சமூகம் உள்ளது. ஏனைய விவசாயிகளுக்கும் சிறந்த விதைநெல்லை விநியோகிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தக்கூடிய வாய்ப்பும் நாட்டின் தேசிய உற்பத்தியை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பமும் ஏற்படும்' என்றார்.

'இலங்கையில் 10 சதவீதம் முதல் 15 சதவீதமான விதைநெல்லை மாத்திரமே விவசாயத் திணைக்களம் உற்பத்தி செய்கின்றது. ஏனைய உற்பத்தியை தனியார் விவசாய அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன.

முறைகேடான விதைநெல் விற்பனை மூலம் நெல் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும். அத்துடன்,   நோய்த் தாக்கமும் ஏற்பட்டு குறைந்தளவான உற்பத்தி கிடைக்கும். இதனால், குறைந்த இலாபம் கிடைக்கும் அல்லது நட்டத்துக்கு ஆளாக வேண்டும். எனவே சிறந்த விதைநெல் பிரயோகம், நவீன விவசாய முறைகள் தொடர்பில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையை விவசாயத் திணைக்களம் முன்னெடுக்க வேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--