2021 ஜனவரி 23, சனிக்கிழமை

அனுமதிப்பத்திரங்களும் உறுதிப்பத்திரங்களும் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2016 ஜூலை 13 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

சம்மாந்துறை பிரதேசத்துக்கான குடியிருப்புக் காணிகளுக்கான அனுமதிப்பத்திரம் மற்றும் ரன்பிம உறுதிப்பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு, அப்பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு குடியிருப்புக் காணிகளுக்கான அனுமதிப்பத்திரம் மற்றும் உறுதிப்பத்திரங்களை வழங்கி வைத்தார்.

இதன்போது 07 கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகளுக்குட்பட்ட 160 குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்களும் 70 குடும்பங்களுக்கு ரன்பிம உறுதிப்பத்திரங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இதுவரை காலமும் சம்மாந்துறை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பெரும்பாலான விவசாய மற்றும் குடியிருப்புக் காணிகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்கப்படாமல், அனுமதிப்பத்திரம் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .