Princiya Dixci / 2016 ஜூலை 25 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அஷ்ரப்கான், றியாஸ் ஆதாம்
அம்பாறை மாவட்ட எல்லை நிர்ணய மீளாய்வுக் கூட்டம் கடந்த திங்கட்கிழமை(24), அம்பாறை மாவட்ட கச்சேரி மண்படத்தில் நடைபெற்றது. தேசிய எல்லை நிர்ணய மீளாய்வுக்குழுவின் தலைவர் அஷொகா பீரிஸ் தலைமையில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேசங்களிலும் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட எல்லைகள் தொடர்பில் ஒவ்வொரு பகுதிகளாகப் பரிசீலனை செய்யப்படுகின்றது. எல்லை நிர்ணயங்கள் தொடர்பில், அரசியற்கட்சிகள் மற்றும் பிரதேச முக்கியஸ்தவர்களினதும் கருத்துக்களும் பெறப்பட்டது.
இக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித்த வணிக சிங்க, சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மன்ஜூல பெர்னாண்டோ, பிரதேச செயலாளர்கள் உட்பட தேசிய எல்லை நிர்ணய மீளாய்வுக்குழு மற்றும் தொழிநுட்பக் குழு உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.




அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .