Niroshini / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்
தேடல்மிக்க மாணவர் சமுதாயத்தினை உருவாக்க வேண்டுமானால் ஆசிரியர்கள் தேடல் மிக்கவர்களாகவும் நாளாந்தம் நவீன தகவல்களைப் பெற்றுக்கொண்டு அதனை மாணவர்களுக்கு பிரயோகிக்கும் திறன் படைத்தவர்களாகவும் ஆசிரியர்கள் மாற வேண்டும். அவ்வாறானால் தான் ஆரோக்கியமான கற்றல் சமூதாயத்தை தோற்றுவிக்க முடியும் என நாவிதன்வெளிக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து தெரிவித்தார்.
சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் சர்வதேசஆசிரியர் தின நிகழ்வு பெற்றோர் மற்றும் மாணவர்களின் ஏற்பாட்டில் 6அம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில், பாடசாலையின் அதிபர் எஸ்.பாலசிங்கன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
ஆசிரியர் தொழிலில் புதிய யுகத்துக்கேற்ப புதிய விடயங்களை கற்க வேண்டும்.அதாவது ஆங்கிலம், கணினி அறிவு கட்டாயம் ஆசிரியர் மத்தியில் இருக்க வேண்டும்.அப்போதுதான் நவீன யுகத்துக்கு ஏற்ப மாணவர்களை மாற்ற முடியும். அது போன்று மாணவர்களும் ஆங்கிலம்,கணினிப் பாடங்களில் அதிக தேர்ச்சி பெற வேண்டும்.அப்போதுதான் சவால்களுக்கு முகம்கொடுத்து வெல்ல முடியும்.
மாணவர் பருவத்தில் ஆசிரியரை மதித்து அவர்கள் சொற்படி நடந்த பலர் இன்று சமூதாயத்தில் பெரியவர்களாகவும் மதிக்கத்தக்கவர்களாகவும் இருக்கின்றார்கள்.
நாங்கள் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று கூறினாலும் எங்கள் கண்முன் தெரிகின்றவர்களாக ஆசிரியரைப் பார்க்கின்றோம் ஆனால், ஆரம்ப காலத்தில்ஆசிரியருக்கு மாணவர்கள் அடிப் பணிந்து மதித்து கல்வியை பெற்றுக் கொண்டனர் .
இன்று அது படிப்படியாக குறைவடைந்து செல்கின்றமையை காணக்கூடியதாக இருக்கின்றது. இதனால் சமூகத்தில் சீர்கெட்ட நிலை உருவாக வாய்ப்பு அதிகமாக அமைகின்றது.நகர்புறத்தில் வாழுகின்ற மாணவர்களை விட அதிகமாக கிராமப்புற மாணவர்கள் அசிரியர்களை மதித்து அவர்களின் சொல்படி நடக்கும் நிலை அதிகமாகக் காணப்படுகின்றது. இந்நிலை தொடர்ந்து இருக்க வேண்டும். அப்போதுதான் உயர்ச்சி பெறலாம் என்றார்.
8 minute ago
18 minute ago
18 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
18 minute ago
18 minute ago
23 minute ago