2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

ஆலையடிவேம்பில் பொலிஸ் நடமாடும் சேவை

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 ஜூலை 19 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேசத்தில், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொலிஸ் நடமாடும் சேவை, நாளை 20ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி வரை ஒரு மாத காலத்துக்கு நடைபெறவுள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ஜெமீல், நேற்றுத் தெரிவித்தார்.

ஆலையடிவேம்பு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள இந்நடமாடும் சேவையை, அம்பாறை மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதசிங்க மற்றும் மாவட்டத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் சாமந்த விஜேசேகர ஆகியோர் கலந்துகொண்டு அங்குராப்பணம் செய்து வைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அன்றைய தினம் இரத்ததான முகாம், இலவச வைத்தியசேவை, சிரமதான பணிகள் என்பன நடைபெறவுள்ளன. இந்நடமாடும் சேவையினுடன் இணைந்ததாக, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஒரு மாத காலத்துக்கு நடமாடும் பொலிஸ் முகாம் அமைக்கப்படவுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் தங்களது பிரச்சினைக்கு உடனடித் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இதன்போது, பொலிஸ் முறைப்பாட்டு பிரதி வழங்கல், பிரதேச செயலகசேவை, பிறப்புச் சான்றிதழ் வழங்கல் மற்றும் அடயாள அட்டை வழங்கல் போன்ற சேவைகளும் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் ஆலோசனைக்கு அமையவே, இந்நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .