2021 மே 08, சனிக்கிழமை

இரண்டாவது நாளாகத் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்

Gavitha   / 2015 ஒக்டோபர் 02 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்  

அம்பாறை மாவட்ட வேலையில்லா தமிழ் பட்டதாரிகளுக்கு, கிழக்கு மாகாணசபை உறுதியான பதிலை வழங்கவில்லை என்று தெரிவித்து  தீர்வு கிட்டும் வரை, இரண்டாவது நாடாகவும் இன்று வெள்ளிக்கிழமை (02) வேலையில்லாப்பட்டதாரிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக, அம்பாறை மாவட்ட வேலையில்லா தமிழ் பட்டதாரி அமைப்பின் நிருவாக உறுப்பினர்.எம்.திலீபன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட வேலையில்லா தமிழ் பட்டதாரிகளுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர், உறுப்பினர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை, நேற்று வியாழக்கிழமை (01) இடம்பெற்றபோதும் உறுதியான பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் இதனாலேயே இன்றும் தாங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக  அவர் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X