2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு சரீரப்பிணை

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, சம்மாந்துறை பிரதேசத்தில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தில் தொழில் பெற்றுத் தருவதாக இரண்டு நபர்களிடம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, சந்தேக நபரை இரண்டு பேர் அடங்கிய, ஒரு இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம். பஸீல் நேற் (10) விடுதலை செய்தார்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மட்டக்களப்பு தரவைப் பிரதேசம் மற்றும் காரைதீவு கிராமத்தைச் சேர்ந்த இரு நபர்களிடம் சமுர்த்தி திணைக்களத்தில் ஒரு நபருக்கு முகாமைத்துவ உதவியாளர் பதவியும், மற்றைய நபருக்கு காரியாலய உதவியளர் பதவியைப் பெற்றுத் தருவதாக அவர்களிடமிருந்து, தலா 4 இலட்சத்து 50 ஆயிரம் இலஞ்சமாக பெற்று ஏமாற்றி வந்துள்ளார்.

இதயனையடுத்து, பாதிக்கப்பட்ட குறித்த நபர்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், இம்முறைப்பாட்டையடுத்து பொலிஸார் மேற்கொண்ட துரித விசாரணையின் போது, பாண்டிருப்பைச் சந்தேக நபர் ஒருவரை கடந்த ஓகஸ்ட் மாதம்  27ஆம் திகதியன்று, கைது செய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்தார்.

குறித்த சந்தேக நபரை சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம். பஸீல் முன்னிலையில் மீண்டும், நேற்று (10) ஆஜர் செய்தபோது, பெற்ற பணத்தை திருப்பி ஒப்படைப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, இவர் இருவர் அடங்கிய  1 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--