2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

2 உணவகங்களை மூட உத்தரவு

Suganthini Ratnam   / 2016 ஜூலை 29 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, சம்மாந்துறை பிரதேசத்தில் நுகர்வுக்குப் பொருத்தமில்லாத உணவுப் பண்டங்களை விற்பனைக்கு வைத்திருந்த 02 உணவகங்களை தற்காலிகமாக மூடுமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம்.பஸீல், இன்று (29) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

அத்துடன், 08 வர்த்தக நிலையங்களுக்கு தலா 05 ஆயிரம் ரூபாய் அபராதத்தையும் நீதவான் விதித்தார்.
 
மேலும், தற்காலிகமாக மூடப்பட்டுள்ள இரு உணவகங்களினதும் சுகாதர அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்மாந்துறை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை (26) பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது வர்த்தக நிலையங்களில நுகர்வுக்குப் பொருத்தமில்லாத உணவுப் பண்டங்களை கைப்பற்றியதுடன், பாவித்த தேங்காய் எண்ணெயை மீண்டும் பாவித்தமை தொடர்பிலும் கண்டுபிடிக்கப்பட்டது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .