2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

‘உத்தியோகத்தர் கைதில் காலநீடிப்பு வேண்டாம்’

Editorial   / 2020 ஜனவரி 05 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

நிந்தவூர் கமநலசேவை   நிலையத்தில் பணி புரியும் பெண்ணைத் தாக்கிய சம்பவத்தை, அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கவீந்திரன் கோடீஸ்வரன் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இச்சம்பவம், நிந்தவூரில் கடந்த 1ஆம் திகதியன்று நண்பகல் இடம்பெற்றுள்ளதுடன், நிந்தவூர் கமநல கேந்திரமத்திய நிலையத்தில் பணியாற்றும் நிலைய முகாமைத்துவ உதவியாளர் திருமதி தவப்பிரியா சுபராஜ் (வயது34) என்பவரே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான குறித்த பெண்ணை, நேற்று (04) முற்பகல்  கல்முனை ஆதர வைத்தியசாலைக்குச் சென்று சந்தித்த பின்னர்  நாடாளுமன்ற உறுப்பினர்  கருத்துத் தெரிவிக்கையில்,

“பெண்ணைத் தாக்கிய குறித்த மேலதிகாரி, ஊழியர்கள் மீது பல்வேறு சந்தர்ப்பங்களில் தாக்குதலுக்கு உள்ளாக்கியதோடு, பல அசௌகரியங்களையும் ஏற்படுத்தியுள்ளார். பெண் உத்தியோகத்தரைத் தாக்கியவரை இதுவரை பொலிஸார் கைது செய்யாமல் இருப்பது மிகுந்த மன வேதனையை தருகின்றது.

“நான் பொலிஸ், குற்றப்புலனாய்வினரைத் தொடர்புகொண்டு விரைந்து கைதுசெய்யுமாறு தொடர் அழுத்தங்களை கொடுத்துவருகின்றேன். தாக்குதலுக்கு உள்ளான பெண், உடல் ரீதியாகவும் ,உள ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார்.

“இச்சம்பவம் தொடர்பாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளதோடு,  தாக்குதல் மேற்கொண்ட அதிகாரியை பணியிலிருந்து நீக்குமாறு வலியுறுத்தியுள்ளேன்” என்றார்.

மேலும், “இந்தத் தாக்குதல் சம்பவத்தை, தமிழ் மக்கள் இனவாத சம்பவமாகவும் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதியாகவுமே பார்க்கின்றனர். ஆகவே, இன முரண்பாடு ஏற்படா வண்ணம் அந்த அதிகாரியை கைது செய்யுமாறு, பொலிஸாரை வலியுறுத்தியுள்ளேன்”  எனவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .