Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 மார்ச் 27 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
'சட்டங்களை மீறி நான் செயற்பட முடியாது. சட்டத்தின் ஊடாக மிக விரைவில் ஏனைய அரசியல் கைதிகளும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றேன்' என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு மீள்குடியேற்ற இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலகத்தில் சனிக்கிழமை(26) இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
'அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுடனும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடனும் கதைத்துள்ளேன். 146 கைதிகள் இருக்கின்றனர். இவர்களில் 60 கைதிகளை உடனடியாக விடுவிக்க சந்தர்ப்பம் சூழ்நிலைகள் இருந்தது. இவர்களில் 40 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏனைய கைதிகளுக்கு சாட்சிகளை குறைத்து புனர்வாழ்வு கொடுக்க இருக்கிறோம்.
ஆனால், வழக்கு சட்டத்தரணிகள் கூறுகின்றார்கள் அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்க இடமில்லையென்று கூறுகின்றனர்.
32 கைதிகளுக்கு சாட்சிகள் கொடுக்க வேண்டும். அதனை கடந்த வாரம் செய்திருப்பார்கள். அதனைத் தொடர்ந்து அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்போம்' என்றார்.
'சட்டத்தை மீறி நான் செயற்பட முடியாது. சட்டம் சட்டமாக இருக்க வேண்டும். நான் குற்றம் செய்தாலும் அந்த சட்டத்துக்கு அடிபணிந்து தான் நடக்க வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.
16 Oct 2025
16 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Oct 2025
16 Oct 2025