2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

‘ஒன்றாகப் பயணிப்போம்’

Editorial   / 2020 மார்ச் 09 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

மாவீரர்களின் எண்ணங்களையும் சிந்தனைகளையும் சுமந்தவர்களாக நாங்கள் ஒன்றாக பயணிக்க வேண்டுமென, அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், நேற்று (08) தெரிவித்தார்.

பெரியநீலாவணை, காவேரி விளையாட்டு கழகத்தின் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்துரையாற்றுகையில், “அம்பாறை மாவட்டத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதில் பல சக்திகள் பின்நின்று செயல்படுகின்றன. இவற்றுக்கு நாங்கள் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்” என்றார்.

“பேரினவாத சக்திகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டிய ஒரு தேர்தல் களமாக இத்தேர்தல் அமைந்திருக்கின்றது. இந்தத் தேர்தல் காலம் என்பது அம்பாறை மாவட்டத்து தமிழ் மக்களின் இருப்பைப் பாதுகாக்கின்ற ஒரு தேர்தலாக இருக்கின்றது.

“இதில் எமது வாக்குரிமையை சிறப்பாக பயன்படுத்தி, தமிழ்த் தேசியத்தையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும் பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இதன்மூலமே எமது இருப்பை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்” என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X