Suganthini Ratnam / 2016 ஜூலை 29 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா,எஸ்.எம்.அறூஸ்,வசந்த சந்திரபால, எம்.ஏ.றமீஸ், பைஷல் இஸ்மாயில்
அம்பாறை, ஒலுவில் கிராமத்தில் ஏற்பட்டுள்ள பாரிய கடலரிப்பை தடுத்துநிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி இன்று (29) வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.
ஜும்மா தொழுகையின் பின் ஒலுவில் சந்தை சதுக்கத்தில் ஆரம்பமாகிய பேரணி, வெளிச்சவீட்டுப் பிரதேசம்வரை சென்று அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒலுவில் அனைத்து பள்ளிவாசல் சம்மேளனம், சமூக சேவை நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டப்; பேரணியை ஏற்பாடு செய்திருந்தன.
இதன்போது, ஒலுவில் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம்.முஸ்தபா தெரிவிக்கையில், 'துறைமுக நிர்மாணத்தைத் தொடர்ந்து ஒலுவில் கிராமத்தில் பாரிய கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பல ஏக்கர் தென்னந்தோட்டங்களும் கடலரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக ஒலுவில் கிராமம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு மக்கள் செய்வதறியாது காணப்படுகின்றார்கள்.
கடலரிப்பைத் தடுப்பதற்கு பல அரசியல்வாதிகள் வாக்குறுதி அழித்தும், இதுவரையும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இக்கடலரிப்பை தடுப்பதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
மேலும், ஆர்;ப்பாட்ட இறுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கான மகஜர்கள் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டன.


6 minute ago
39 minute ago
47 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
39 minute ago
47 minute ago
56 minute ago