2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

கஞ்சா கலந்த நிஜாம் பாக்குடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2016 மார்ச் 28 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை, நாவிதன்வெளிப் பிரதேசத்தில் கஞ்சா கலந்த நிஜாம் பாக்குகளை கொண்டுவந்ததாகக் கூறப்படும் 20 மற்றும் 22 வயதுகளையுடைய இளைஞர்கள் இருவரை ஞாயிற்றுக்கிழமை (27) இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளொன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பில் தமக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (27) இரவு சவளக்கடை பிரதான வீதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, 14 கிராம் கஞ்சா கலந்த நிஜாம் பாக்கைக் கொண்ட மூன்று பக்கெட்டுகளை மோட்டார் சைக்கிளில் கொண்டுவந்த இவர்களை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.   

இச்சந்தேக நபர்கள் நற்பட்டிமுனை, சவளக்கடைப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இச்சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X