2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

'கடந்தகால ஆட்சியில் தமிழர்களின் பல்வேறு விடயங்கள் பின்தள்ளப்பட்டன'

Suganthini Ratnam   / 2016 ஜூலை 11 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

கடந்தகால ஆட்சியின்போது, தமிழ் மக்களினுடைய பல்வேறு விடயங்கள் பின்தள்ளப்பட்ட நிலைமையில் காணப்பட்டன. ஆனால், இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அது அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தெரிவித்தார்

சர்வதேச கூட்டுறவுதினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு பலநோக்குக் கூட்டுறவுச்சங்கத்தினால் மூத்தோர் கௌரவிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நற்பிட்டிமுனை சுமங்கலி மண்டபத்தில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர்  மேலும் தெரிவிக்கையில், 'வட, கிழக்கில் இருக்கின்ற முக்கியமான பல சங்கங்கள் கடந்தகால யுத்தத்தின்போது வலுவிழந்து இருக்கின்றன. அவ்வாறான சங்கங்களை இந்த புதிய அரசாங்கத்தின் நல்லாட்சியிலே அரசியல்வாதிகளாகிய எம்மைப்போன்றவர்களின் பங்களிப்புடனும் கட்டியெழுப்பவேண்டும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .