2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

குடும்ப மோதலில் பெண் மரணம்

Editorial   / 2020 ஜனவரி 13 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

தாபரிப்புப் பணக்கொடுக்கல் வாங்கல் காரணமாக  ஏற்பட்ட குடும்ப மோதலில்  படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர், இன்று (13) உயிரிழந்துள்ளார்.

சாய்ந்தமருது-6  ரீ.எம் வீதியைச் சேர்ந்த 07 பிள்ளைகளின்  தாயான கலந்தர் லெப்பை கமருன் நிஸா (வயது 42) என்ற பெண்ணே உயிரிழந்தவராவார்.

குறித்த பெண், உறங்கிக்கொண்டிருந்த போது, இம்மாதம் 9ஆம் திகதி அதிகாலை பெற்றோல் கலனுடன்  திடிரென வீட்டினுள் உட்புகுந்த நபரொருவர், அவர் மீது பெற்றோல் ஊற்றி எரித்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த குறித்த பெண், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை  அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு, 3 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

இந்த எரிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்  இறந்த பெண்ணின் முன்னாள் கணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .